Header Ads



உங்கள் வாக்குறுதியை நம்பிய, மக்களின் நம்பிக்கை பொய்யாக்கப்பட்டதற்கு நீங்களே பொறுப்பு...!

ரணில்-சிறிசேன அரசாங்கம் முன்னைய ராஜபக்ச அரசாங்கத்தின் பாணியை நோக்கி வீழ்ச்சியடைவதை தவிர்ப்பதற்காக திலக்மாரப்பனவை அமைச்சர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குமாறு சிவில் சமூக பிரதநிதிகள் சிலர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஜனாதிபதிக்கும் கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் அடங்கிய குறிப்பிட்ட குழுவினர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது.

அவன்ட் கார்டே நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியின் சட்டத்தரணியாக செயற்பட்ட திலக்மாரப்பன , உங்களுடைய கட்சியினால் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு அவரிற்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டது குறித்து நாங்கள் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளோம்.

60 நாட்களில் புதிய தேசம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்த உங்களிற்கும் உங்கள் அரசாங்கத்திற்கும் அவன்ட் கார்டே நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியின் சட்டத்தரணியாக, ஆலோசகராக  செயற்பட்டதை ஏற்றுக்கொள்ளும் திலக்மாரப்பனவை முக்கிய அமைச்சராக நியமிப்பதற்கான தார்மீக உரிமை கிடையாது.

நிசங்க சேனாதிபதி பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் ஓரு வர்த்தகபுள்ளி, மேலும் அவர் முன்னைய அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்புகளை பேணியவர்.

நிசங்க சேனாதிபதிக்கும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உட்பட ஐவரிற்கு எதிராக அனுமதியின்றி ஆயுதங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்தது, அனுமதிப்பத்திரமின்றி அவற்றை வைத்திருந்தது, மேற்குறிப்பிட்ட குற்றங்களை செய்வதற்கு உடந்தையாகயிருந்தது, சதித்திட்டம் தீட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யலாம் என நீதித்துறையின் முக்கிய அதிகாரிகளே தெரிவித்திருந்தனர்.

எனினும் சட்டமா அதிபர் அவ்வாறன நடவடிக்கையை எடுக்கமறுத்த போதிலும் கடும் அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி அவன்ட் கார்ட் விவகாரத்தை பாரியஇலஞ்சம் மோசடிகள் தொடர்பாக விசாரணைசெய்யும் ஆணைக் குழுவிடம் ஓப்படைத்தார்.

அமைச்சர் திலக்மராப்பனவை தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குள் கொண்டுவந்து அவரிற்கு முக்கிய பதவியை வழங்கியது உங்களது அரசாங்கமே, அமைச்சர் திலக் மாரப்பனவே ஜனவரி 8 ம் திகதி நல்லாட்சிமாற்றம் நிகழ்ந்த  பின்னரும் தான் அவன்ட் கார்டே நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியின் சட்டத்தரணியாக, ஆலோசகராக  செயற்பட்டதை ஏற்றுக் கொண்டுள்ளார், மேலும் அவர் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சார்பாக பாராளு மன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

குறிப்பிட்ட அமைச்சர் அவன்ட்கார்டே நிறுவனத்தின் சார்பில் செயற்பட்டுள்ளதால் அந்த நிறுவனத்தின் சகல குற்றங்களிற்கும் உங்களது அரசாங்கமும் பொறுப்பாளியாகின்றது, மேலும் உங்கள் அமைச்சர்களே பாராளு மன்றத்தில் இது குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர், உங்கள் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் உட்பட பலர் அவன்ட்கர்டே நிறுவனத்தினால் நன்கு பராமரிக்கப்படுவதாக  பாராளுமன்றத்தில் உங்கள் அமைச்சர்களே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

ஆகவே இதன் காரணமாக ஊழலற்ற அரசாங்கம் அமைக்கப்படும் என்ற உங்கள் வாக்குறுதியை நம்பிய மக்களின் நம்பிக்கை பொய்யாக்கப்பட்டதற்கு நீங்களே பொறுப்பு.

ஆகவே உங்கள் அரசாங்கம் முன்னைய ராஜபக்ச அரசாங்கத்தின் பாணியை நோக்கி வீழ்ச்சியடைவதை தவிர்ப்பதற்காக திலக்மாரப்பனவை அமைச்சர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குமாறு கோருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. உடனடியாக திலக் மானப்பன தனது முழு பதவிகளில் இருந்தும் நீகப்படுவேதொடு அவர் எம்பி பதிவியில் இருந்தும் நீக்கப்பட வேண்டும். அதே நேரம் விஜதாச மற்றும் வஜிர ஆகியோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. உடனடியாக திலக் மானப்பன தனது முழு பதவிகளில் இருந்தும் நீகப்படுவேதொடு அவர் எம்பி பதிவியில் இருந்தும் நீக்கப்பட வேண்டும். அதே நேரம் விஜதாச மற்றும் வஜிர ஆகியோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.