இஸ்லாமிய எதிர்ப்பு சட்டங்களை, அமுல்படுத்த அழுத்தம் கொடுத்ததன் மூலம்..,
நாட்டில் இஸ்லாமிய எதிர்ப்பு சட்டங்களை அமுல்படுத்த அழுத்தம் கொடுத்ததன் மூலம் ஆளும் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததாக மியன்மாரின் பலம்மிக்க பௌத்த தேசியவாத அமைப்பின் இணை நிறுவனர் குறிப்பிட்டுள்ளார்.
மா பா தா என்று அழைக்கப்படும் பௌத்த தேசியவாத அமைப்பு வரும் நம்பவர் 8 ஆம் திகதி நடைபெறும் பொது தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் நிறுத்தவில்லை. மியன்மார் சட்டத்தில் பௌத்த பிக்குகள் தேர்தலில் போட்டியிட தடை உள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த அரைநூற்றாண்டில் முதல் முறை மக்கள் தேர்தல் மூலம் அரசை நியமிக்கும் பாராளுமன்ற தேர்தலில் மா பா தா அமைப்பு பலம்மிக்க காரணியாக மாறியுள்ளது.
இதில் மா பா தா அமைப்பின் இணை நிறுவனரான பார் மவுகா, தமது அமைப்பு அரசுடன் ரகசிய பேச்சுவார்த்தை களில் ஈடுபட்டு இஸ்லாமிய எதிர்ப்பு சட்டங்களை கொண் டுவந்ததை முதல்முறை அம்பலப்படுத்தியுள்ளார்.
மியன்மார் அரசினால் அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டங்களில், மதம் மாறுவதற்கு அரசின் அனுமதி கோர வேண்டி இருப்பதோடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பெண்கள் குழந்தைபெற காட்டயப்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று ஒரு பெண்ணுக்கு மேல் திருமணம் முடிப்பவர்கள் மீது தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டது.
முஸ்லிம்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக இந்த சட்டங்கள் மியன்மாரில் மதங்களுக்கு இடையிலான பதற்றத்தை அதிகரிக்கும் என்று மனித உரிமை குழுக்கள் எச்சரித்திரு ந்தன.

pongada ponga kaalam vellum vedra pine vangada vanga.
ReplyDelete