Header Ads



25 ஆயிரம் பழைய செல்போன்களை கொண்டு உருவாக்கப்பட்ட கார்

தைவானில் உபயோகபடுத்தப்பட்ட பழைய செல்போன்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கார் ஒன்று மக்களிடையே பிரபலமடைந்துள்ளது. அந்நாட்டின் நியுதைபேவை லின் என்பவரே இந்த காரை உருவாக்கி சாதனை படைத்தவர். 53 வயதான இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு ஊராக சென்று பழைய செல்போன்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். கருப்பு, வெள்ளை, சிவப்பு, நீலம் என பல வண்ணங்களில் சுமார் 25 ஆயிரம் செல்போன்களை லின் சேகரித்தார். 

அதன் பின்னர் மரப்பலகையை கொண்டு கார் ஒன்றை உருவாக்கிய அவர் அதில் பசை மூலம் சேகரித்த செல்போன்களை ஒட்டினார். 4 மாத கடின உழைப்பிற்கு பின் தற்போது அவரது செல்போன் கார் முழுமையடைந்துள்ளது. 

எந்த பொருளும் வீணாவது கிடையாது என்பதை உணா்த்தும் வகையில் பழைய செல்போன் மூலம் காரை உருவாக்கியதாக கூறும் லின் தான் படித்த பள்ளியில் இந்த காரை காட்சிபடுத்தியுள்ளார். இந்த கலை பொருளை விற்கும் எண்ணம் இல்லை என்றும் லின் கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.