Header Ads



மைத்திரி + ரணில் இன்று தனியாக சந்தித்து, முக்கிய தீர்மானம்

அவன் கார்ட் ஆயுதக் களஞ்சிய விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குறிய அறிவிப்பை வெளியிட்ட சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தொடர்பாக இன்று இன்று முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக ஆராய, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

இதன் போது, திலக் மாரப்பன குறித்து முடிவெடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவன் கார்ட் விவகாரத்தில் அமைச்சர்கள் திலக் மாரப்பன, விஜேதாச ராஜபக்ச, வஜிர அபேவர்த்தன ஆகியோர், முறைகேடுகளுக்குத் துணைபோவதாகவும், இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று, அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால், சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்துக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.