Header Ads



மனிதர்கள் நினைத்தால்தான், தீவிரவாதத்தை ஒடுக்க முடியும் - தலாய் லாமா

பாரீஸில் நடந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதத்தை தடுக்குமாறு கடவுளிடம் முறையிடுவது தவறானது என புத்தமத தலைவரான தலாய் லாமா கருத்து தெரிவித்துள்ளார்.

திபெத் நாட்டை சேர்ந்த புத்தமத தலைவரான தலாய் லாமா ஜேர்மன் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அண்மையில் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, ‘பாரீஸில் நிகழ்ந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதத்தை எவ்வாறு ஒடுக்க முடியும்? இதற்கு கடவுளிடம் முறையிடுவது சரியானதா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதில் அளித்த தலாய் லாமா, ‘தீவிரவாதத்தை ஒடுக்குமாறு கடவுளிடம் முறையிடுவது முற்றிலும் முரணானது.

உலக மக்கள் அனைவரும் அமைதியை மட்டுமே விரும்புகின்றனர். நான் புத்தமதத்தை சேர்ந்தவர் என்பதால், பிரார்த்தனைகளில் எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது.

ஆனால், தீவிரவாதத்தை கடவுளிடம் பிரார்த்தனை செய்வதால் முடிவுக்கு கொண்டு வரமுடியாது.

மக்கள் கடவுளிடம் முறையிட்டால், “நீங்கள் தானே தீவிரவாதத்தை வளர்த்தீர்கள். எனவே, நீங்களே அதனை தீர்த்துக்கொள்ளுங்கள்” என்று தான் கடவுள் பதிலளிப்பார்.

உண்மை தானே? மனிதர்கள் உருவாக்கிய தீவிரவாதத்தை கடவுள் எதற்காக தீர்த்து வைக்க முடியும்?

தீவிரவாதத்தை கடவுள், மதம் அல்லது அரசாங்கம் என எதுவும் தீர்த்து வைக்க முடியாது.

மனிதர்கள் ஒவ்வொருவரும் நினைத்தால் தான் தீவிரவாதத்தை ஒடுக்க முடியும். அரசாங்கத்திடம் நடவடிக்கையை எதிர்ப்பார்க்காமல் ஒவ்வொரு குடும்பத்திற்குள் அமைதியை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

இவ்வாறு உலகத்தையே அமைதியான ஒரே குடும்பமாக மாற்றினால், தீவிரவாதம் முற்றிலுமாக அழிந்துவிடும்’ என தலாய் லாமா கருத்து தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இவர்களின் பௌத்த தீவிரவாதம் பர்மாவில் கொன்றுகுவித்த போது...என்ன செய்து கொண்டு இருந்தார்.

    ReplyDelete
  2. எந்த மதமும் தீவிரவாதத்தை அனுமதிக்கவில்லை
    அது என்ன பௌத்த தீவிரவாதம் ???
    தான்தோன்றி தனமாக சில பெளத்தர்கள் செய்யும் போது பெளத்த தீவிரவாதம். இந்துக்கள் செய்யும் போது இந்து தீவிரவாதம்
    ஆனால் முஸ்லிம்கள் செய்யும் போது முஸ்லிம் தீவிரவாதம் என்று சொல்ல கூடாது அப்படி தானே

    ReplyDelete

Powered by Blogger.