மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழத்திற்கு, இளம்வயதில் கல்விகற்க அனுமதிபெற்ற இலங்கையர்
(எம்.எம்.ஜபீர்)
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவளக்கடை பிரதேசத்தில் மதீனா சர்வேதேச இஸ்லாமிய பல்கலைக்கழத்திற்கு சவளக்கடை பிரதேசத்தின் 5ஆம் கொளனியை சேர்ந்த அப்துல் வாகித் றிஸ்கான் தனது இளம் வயதில் கல்வி கற்கும் அனுமதி கிடைக்கப்பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அப்துல் வாஹித் ஆசியா உம்மாவின் மூன்று பிள்ளைகளில் மூத்த மகனான றிஸ்கான் 1993.03.22ஆம் திகதி பிறந்தவர் தனது ஆரம்பக் கல்வியை மத்தியமுகாம் 12ஆம் கொளனி அஸ்-சிறாஜ் மகா வித்தியாலத்திலும், இடைநிலை கல்வியின் தரம் 7 வரை கற்று கல்முனை அல்-ஹாமியா அரபுக் கலாபீடத்தில் மார்க்க கல்வியை 8 வருடங்கள் கற்று 2013ஆம் ஆண்டு மௌலவி பட்டம் பெற்றார்.
கல்முனை அல்-ஹாமிய அரபுக் கலாபீடத்தில் 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை ஆசிரியராக கற்பித்தும் வந்துள்ளார்.
2013ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேற்றை பெற்று தற்போது ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக் கழத்தில் இஸ்லாமிய கற்கைள் அரபு மொழி பீடத்தில் முதலாம் வருட மாணவனாக கற்று வருகின்றார்.
2014ஆம் மதீனா சர்வேதேச இஸ்லாமிய பல்கழக்கழத்திற்கு வின்னப்பித்து தற்போது பல்கழக்கழக இணைத்தளத்தில் வெளியோகியுள்ளது.
சவளக்கடையை சேர்ந்த ஏ.சீ.தஸ்தீக் மதனீ முதல் முறையாக இவ் பிரதேசத்திலிருந்து மதீனா சர்வேதேச இஸ்லாமிய பல்கலைக்கழத்திற்கு தெரிவு செய்யப்பட்டு கல்வி கற்று பட்டம் பெற்று வெளியாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

மாஷா அல்லாஹ் சிறந்த இஸ்லாமிய வழி காட்டியாக வர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.
ReplyDeleteமாஷா அல்லாஹ்,ரிஸ்கான் (ஹாமி) கற்று சிறந்த தாஇயாக வர அள்ளாஹ்வை பிராத்திக்கின்றேன்,
ReplyDeleteமாஷா அல்லாஹ்,ரிஸ்கான் (ஹாமி) கற்று சிறந்த தாஇயாக வர அள்ளாஹ்வை பிராத்திக்கின்றேன்,
ReplyDeleteமாஷாஅல்லாஹ், ,,,,,ஆமீன்
ReplyDelete