சிங்கள மொழிப் பிரச்சாரத்தில், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
-ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்-
இலங்கை சிங்கள மொழி பேசும் பௌத்த மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நாடாகும். இதே நேரத்தில் இங்கு வாழும் கிருத்தவ மக்களும் பெரும்பாலும் சிங்கள மொழியை தாய் மொழியாகக் கொண்டுள்ளார்கள். நகர் புறத்தில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்களும் சிங்கள மொழியை வாசிப்பு, எழுத்து மொழியாகக் கொண்டவர்களே.
இவர்களுக்கு இஸ்லாத்தின் செய்தியை சிங்கள மொழியில் கொண்டு சேர்ப்பதற்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பல விதமான முயற்சிகளிலும் ஈடுபடுகின்றது.
இஸ்லாம் பற்றிய மாற்று மத நண்பர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாகவும், இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை குர்ஆன், சுன்னா வழியில் விளக்கும் வகையிலும் இது வரை சுமார் 20 க்கும் அதிகமாக புத்தகங்களை ஜமாஅத் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
அதே போல், சிங்கள மொழி மூலமான உரைகள் அடங்கிய CD & DVD க்களும் வெளியிட்டு மாற்று மத நண்பர்களுக்கு இலவச விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி - பதில் நிகழ்ச்சிகள்.
மாற்று மத நண்பர்களுக்கு மத்தியில் இஸ்லாம் பற்றி உருவாக்கப் பட்டுள்ள தவறான எண்ணங்களை நீக்கும் விதமாக நாடு முழுவதும் இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி - பதில் நிகழ்ச்சி “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற பெயரில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.
சிங்கள மொழியில் அல்- குர்ஆன் மொழி பெயர்ப்பு
சிங்கள மொழி பிரச்சாரத்தின் ஓர் முக்கிய அம்சமாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிங்கள மொழியில் திருமறைக் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அல்-குர்ஆன் மொழி பெயர்ப்புடன் இணைந்த விளக்கவுரையும் தரப்பட்டுள்ளமை இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.
இஸ்லாத்தைப் பற்றிய மாற்று மத சகோதரர்களின் குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்களுக்கான தெளிவாக பதில்கள் அடங்கப் பெற்றே இம்மொழி பெயர்ப்பு தரப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் இறைவனிடம் இருந்து தான் இறக்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் அத்தாட்சிகள் மிகத் தெளிவாக அறிவியல் கருத்துக்களின் ஆதாரத்துடன் விளக்கப்பட்டு தனித் தலைப்பாக விபரிக்கப்பட்டுள்ளது. குறித்த தலைப்பில் உள்ள விளக்கங்களை படிக்கும் யாராக இருந்தாலும் அல்குர்ஆன் அல்லாஹ்விடம் இருந்துதான் இறக்கப்பட்டது என்பதை சந்தேகமற அறிந்து கொள்ள முடியும்.
இன்றைய நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் சொல்லுகின்ற செய்திகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பதாக இறைவன் இவ்வுலகுக்கு அறிவித்து விட்டான் என்ற இறைவனின் தெளிவான முன்னறிவிப்புக்கள் அறிவியல் உண்மைகளுடன் தனியாக தொகுக்கப் பட்டுள்ளது.
உலகில் உள்ள அனைத்து மதங்களையும், வழிகாட்டல்களையும், மார்க்கங்களையும் விட இஸ்லாம் தனித்து விளங்குவதற்கான காரணம் என்ன? என்பதை தெளிவு படுத்தும் அதே நேரம், இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள் என்னென்ன என்பதும் தனித் தனி தலைப்புகளில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளன.
இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களில் மிக முக்கியமான குற்றச்சாட்டான ஜிஹாத் தொடர்பில் பல தலைப்புக்களில் தேவைப்படும் இடங்களில் மிகத் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்பதை குறித்த விளக்கங்களைப் படிக்கும் மாற்று மத சகோதரர்கள் தெளிவாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இது போல், இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பற்றிய விளக்கங்கள் பெண்கள் தொடர்பாக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கான அறிவுப்பூர்வமான பதில்கள் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன.
இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்று வரும் மூட நம்பிக்கைகள், தவறான கொள்கைப் பிரச்சாரங்கள், தர்கா வழிபாடுகள், இணை வைப்புக் காரியங்கள் அனைத்தும் அவை எவ்வாறு தவறானது என்பதும் தக்க ஆதாரங்களுடன் தெளிவு படுத்தப்பட்டு இம்மொழி பெயர்ப்பு தொகுக்கப்பட்டுள்ளது.
மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நாம் கொண்டு சேர்க்கும் போது தான் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்கள், இனவாத பிரச்சாரங்கள் இல்லாமலாகி இஸ்லாம் மனித நேயம் கொண்ட, தெளிவான மார்க்கம் என்பது புலப்படுத்தப்படும்.
இலங்கையில் இனவாத பிரச்சினையை உண்டாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் அனைத்து இனவாத அமைப்புகளுக்கும் அவ்வியக்கங்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்பட்ட ஒரு இஸ்லாமியக் களஞ்சியமாக இது அமையப் பெற்றிருக்கின்றது.
மிக எளிய நடையில், முழுமையான விளக்கங்கள், இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரபூர்வமான, அறிவுப்பூர்வமான பதில்கள், அறிவியல் உண்மைகள், அல்-குர்ஆன் இறை வேதம் தான் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் அனைத்தும் அடங்கி வெளியிடப்படும் இலங்கையின் முதலாவது சிங்கள மொழி பெயர்ப்பு இதுவாகும்.
கடந்த காலங்களில் குர்ஆன் மற்றும் இஸ்லாம் பற்றிய சரியான புரிதல்கள் மாற்று மத நண்பர்களுக்கு வழங்கப்படாமையே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்தது. அதனை நீக்கும் விதமாக இஸ்லாம் பற்றிய முழுமையான புரிதலை தெளிவாக வழங்கும் வகையில் இந்த மொழியாக்கம் அமையப் பெற்றிருக்கின்றது என்றால் மிகையாகாது.

அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeletealhamdulillah good work.
ReplyDeleteMasha Allah
ReplyDeleteஅல் ஹம்துலில்லாஹ்
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteஇலங்கையில் உள்ள சில உலமாக்களுக்கு இப்போது வயிற்றை கலக்கும்
ReplyDeleteஎங்களுக்கு ஏதோ ஒரு வகையில் அடுத்த Jamath களை சீண்டிப்பார்ககாமல் இருக்கவே முடியாதல்லவா???
ReplyDeleteI think we all have to recheck ourself including me. We want to comment something in order to tease other jamath. We should concentrate on spreading the Deen thaan spreading mischief between Muslims.
@M.JAWFER
ReplyDeleteஇதைதான் நாம் கண்டிக்கிறோம் சில உலமாக்கள்ளின் பேச்சுதிறன் ,அவர் குணம், அவர் நட வடிக்கைகள் உங்களுக்கு முன் உதரணமாக இருக்கும் ஏன் அவர் சொல்லும் கருத்துக்களும் கூட ஆனால் சிலர்களுக்கு வேறு சில உலமாக்கள்ளின் மீது பாசமும் மரியாதையும் அவர் கருத்தும் சரியானதாக இருக்கும் ஆனால் அதை வைத்து மற்ற உலமாக்களை குறை கூறுவது அல்லது நையாண்டி செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.ஒர் உலமாவின் வருகை என்பது இஸ்லாமிய உள்ளங்களுக்கு ஈமானை ,இறை அச்சத்தை அதிகரிக்கக் கூடியதாக இருக்க வேண்டுமேயன்றி முஸ்லிம்களின், உலமாக்களின் வாயிற்றை கலக்கக்கூடாது. எல்லோரையும் அனுசரித்து செல்வோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.
Good news
ReplyDeleteகிறிஸ்தவர்களும் நாஸ்திக வாதிகளும் கேட்கும் கேள்விகள் சிலவற்றுக்கு PJ யால் பதில்தர முடியாமல் போனதால் சில ஷஹீஹான ஹதீஸ்களை தூக்கி எறிந்தார் இந்த நிலைமை சிங்கள மொழியிலும் ஏற்படாமல் இருக்க வேண்டும்
ReplyDeleteMohamed Nalim. எந்த கேள்விகள் என்று சொல்ல முடியுமா? அந்த கேல்ல்விகளை தயவு செய்து இங்கு பட்டியல் இடுங்கள்.
ReplyDelete@M.Nalim
ReplyDeleteகிருதவர்களுக்கும் நாஸ்திகர்களுக்கும் பதில் சொல்ல முடியாமல்தான் சில ஷாஹிகான ஹதிஸ்களை நான் ஏற்றுக்கொள்ள வில்லை என்று PJ யோ அவர் சார்ந்தவார்களோ எங்கும் எப்போதும் சொல்லாத போது எப்படி நீங்கள் இதை சொல்ல முடியும் ? வேண்டாம் அவர் மீது இட்டுகட்டுவது. (அல்ல்ஹா நம்மை பாதுகப்பனாக)
pj யின் கருத்துக்கு மாற்று கருத்து உங்களிடம் இருந்தால் அது வரவேற்கத்தக்கது.அதை பதிவிடலாம் ஆரோக்கியமானதாக இருந்தால்.
நண்பர்களே! இயக்கவாதிகளாக மாறாமல் இஸ்லாமியவாதியாக மாற முயற்சிப்போம்.
ReplyDelete@ Voice SriLanka
ReplyDeleteசொல்லுவது தான் மிகசிறந்ததும் சரியானதும் இது தான் நமக்கு தேவை. thanks lot.