குச்சவெளி - இலந்தைக்குளம் முஸ்லிம்களின் ஆதங்கம்..!
-றபாய்தீன்பாபு ஏ.லத்தீப் -
திருகோணமலை நகரின் வடக்கே 35 கிலே மீற்றர் தொலைவில் உள்ள குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தற்போதைய காசிம் நகர் கிராமசேவைப்பிரிவின் எல்லையில் கள்ளம்பத்தை வீதியூடாக இலந்தைக்குளம் என்னுமிடத்தில் குச்சவெளி முஸ்லிம்கள்; கடந்த 1967ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமது வாழ்வாதாரத்தொழில் நிமித்தம் கால் நடை வளர்த்தல் சிறுதோட்டப் பயிர் செய்கை, நன்னீர் மீன்பிடி;,காட்டுத்தொழில் மற்றும் வேளான்மை விவசாயத் தொழிலுக்காகவும் 167 குடும்பங்கள் குடியேறி வாழ்ந்து வந்தனர்.; இலந்தைக்குளம் முஸ்லிம் வித்தியாலயம்,இளந்தைக்குளம் முகைதீன் ஆன்டகை ஜ10ம்ஆப் பள்ளிவாசல்,இலந்தைக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் ,விவசாய சங்கம் என பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களும் முறையாக இக்கிராமத்தில இயங்கி வந்தன. இக்கிராமத்தைச் சூழ ஐந்தாம் கட்டைக்களம்,குச்சவெளியான்; குளம்,கல்கட்டுக்குளம், இளந்தைக்களம்,பெரியகுளம், பெரியஆளம்குளம், கைநாட்டான்குளம்; புளியடிக்கண்டல் , அனைக்கட்டு,செஞ்சாலி என முஸ்லிம்களுக்குச் சொந்தமான வயல் நிலங்களும் குடியிருப்புக் காணிகளும் உள்ளன. கடந்த கால யுத்தத்தின் போது இப்பிரதேசம் விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளன.
இதனால் 1983,1985, 1987,1990 காலப்பகுதியில் அண்டைக்கிராமம் திரியாயிலிருந்து தமிழ் மக்கள் வெளியேறியதைத் தொடர்ங்கினர்.குச்சவெளியில் வாழ்ந்த முஸ்லிம்களில் சிலர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இளந்தைக்குளத்து முஸ்லிம்களும் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்தனர். ஜாயாநகர,; நிலாவெளி, புல்மோட்டை,புடவைக்கட்டு. முள்ளிப்பொத்தானை.ஹொரவப்பொத்தானை போன்ற பிரதேசங்களில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்து குடும்ப பரம்பரையும் கூடிவிட்டன. கடந்த முப்பது வருடமாக மக்கள் இடம் பெயர்ந்ததால் தற்பொழுது இப்பகுதி பெரும் வனாந்தரக் காடுகலாகக் காட்சி தருகின்றன. இளந்தைக்குளம் முஸ்லிம் வித்தியாலயம் தற்பொழுது பள்ளவக்குளம் சுனாமி வீடமைப்புக் கிராமத்தில் இயங்கி வருகின்றன. யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் இரானுவம் இப்பிரதேசத்தில் நிலைகொண்டு காவல் அரன்களை அமைத்து தங்களது கட்டுப்பாடடுக்குள் வைத்திருந்தனர்.மக்கள் இப்பிரதேசங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை இக்காலப்பகுதியில்தான் தொல்பொருள் திணைக்களத்திற்கென 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு அளவீடு செய்யப்பட்டு அடையாளமிடப்பட்டுள்ளன.
ஜனவரி 8ஆம் திகதிக்குப்பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றம் இங்குநிலை கொண்டிருந்த இரானுவமும் வாபஸ் பெறப்பட்டன. நீண்டகாலமாக பராமரிக்கப்படாதிருந்த வயல்நிலங்கள்,குடியிருப்புக்காணிகளையும் துப்பரவு செய்வதற்கான முயற்சியை குச்சவெளிகிழக்கு முஸ்லிம் விவசாய சம்மேளனம் மேற்கொண்டது.இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீளக்குடியேற்றுவதோடு எதிர்வரும் பெரும்போக வேளான்மை செய்வதற்காக கிராசேவை உத்தியோகத்தர்,பிரதேச செயலாளர் ஆகியோரிடம் காணி உரித்தாவணங்களைச் சமர்ப்பித்து பிரதேச செயலாளரின் அனுமதியோடு தமது சொந்த வயல் நிலங்களையும், காடுகளையும் துப்பரவு செய்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் காடழிக்கப்படுவதாகவும்.அரசாங்கத்துக்கச் சொந்தமான நிலங்கள் பலாத்காரமாக அபகரிக்கப்படுவதாகவும் வன இலாகா பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளினால் பிரதேச செயலாளருக்கு முறையிடப்பட்டன.இதன்காரணமாக காணிகளைத் துப்பரவு செய்யும் பணிகளை பிரதேச செயலாளர் தற்காலிகமாக இடைநிறுத்தியதோடு இப்பிரச்சினை சம்மந்தமாக ஆராயும் கூட்டமொன்றை சென்ற மாதம் 3ஆம்திகதி குச்சவெளி பிரதேச செயலாளர் திரு பி.தனேஸ்வரன் பிரதேச செயலகத்தில் கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்தார்..இதன்போது மாவட்ட வனபரிபாலன அதிகாரி திரு.வசந்த லியனகே பிரதேச வன அதிகாரி சரத்குமார,மாவட்ட நிலஅளவைத்திணைக்கள அதிகாரி கிருஸ்னராஜா,திரு விஸ்வராஜா,விவசாய சம்மேளனச் செயலாளர் எஸ்.எம். யூசுப்,உதவிப்பிரதேச செயலாளர், கமநல உத்தியோகத்தர் நீர்ப்பாசன உத்தியோகத்தர்,கிரமசேவை உத்தியோகத்தர்.பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.இக்கலந்துரையாடலின்; போது வனபரபாலனத்திணைக்கள அதிகாரியினால் சில உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இளந்தைக்குளம் பிரதேசத்தில் ஏலவே தொல்பொருள் திணைக்களத்திற்கென ஒதுக்கப்பட்டு அடையாளமிடப்பட்டுள்ள காணிக்குள் அனுமதியின்றி யாரும் செல்லக்கூடாது. இவ்வாறு அடயாளமிடப்பட்டபகுதிக்கள் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் இருக்குமானால் காணி உரித்தாவணங்களைச் சமர்ப்பித்து மாற்றுக்காணி கோருமாறு ஆலோசனை தெரிவித்தார். காணி .உரித்தாவணம் உள்ளவர்களின் காணிகளை நிலஅளவை செய்து துப்பரவு செய்து அடையாளம் இட்டுத்தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது..ஏற்கனவே நில அளவை செய்யப்பட்டு அடயாளப்படுத்தப்பட்ட வயல் காணிகள், குடியிருப்புக் காணிகளை சில தினங்களுக்குள் நிலஅளவை செய்து துப்பரவு செய்வதற்கு அனுமதிப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
அனுமதியின்றி அரசாங்க காணிகளை வெட்டிக் காடழிப்பதை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்தார்.காணி ஆவணம் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் காணிக் கச்சேரியின்ஊடாக உரித்தாவணம் வழங்கப்படுதற்குத் தான் நடவடிக்கை எடுப்பதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார். மேற்படி கலந்துரையாடலில் பங்குபற்றியோர்; அன்றைய தினம் பிரதேச செயலாளர் தலைமையில் காணிகளைச் சென்று பார்வையிட்டனர்.பிரதேச மட்டத்தில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மௌனம் காப்பது வேதனை தருவதாக இடம்பெயர்ந்த மக்கள் தெரிவித்தனர்.எவ்வாறாயினும் தமது பூர்வீக நிலங்களை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்று இக்கிரமத்ததை உருவாக்கியவரகளில் ஒரவரான அல்ஹாஜ். மஜீது மீராசாகிபு ஆகியோர் தெரிவித்தனர்.

Post a Comment