மியான்மர் நிலச்சரிவில் சிக்கி 90 பேர் பலி, 100 பேரை காணவில்லை
மியான்மர் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 90 பேர் பலியாகியுள்ளதாகவும், 100 பேர் வரை காணவில்லை என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேற்கு மியான்மரில் உள்ள கச்சின் மாகாணத்தில் செயல்பட்டு வரும் ஒரு ஆபரண சுரங்கத்தில் 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
இவர்களின் பெரும்பாலனவர்கள் அப்பகுதியில் வசித்து வந்த கிராம மக்கள் ஆவர்.
இந்த நிலையில், சற்று முன்னர் வெளியான தகவலில் அப்பகுதில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் 90 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 100 பேர் வரை காணவில்லை என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த நிலச்சரிவு நேற்று பிற்பகல் நேரத்தில் ஏற்பட்டதாகவும், மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறந்தவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் 100க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Post a Comment