Header Ads



60 கோடி ரூபா - முன்னாள் அதிகாரிகளை கைது செய்யாமைக்கு, மன்னிப்புகேட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி சாதிக்

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் சில் துணி விநியோகத்தின் போது 60 கோடி ரூபா மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யாமை தொடர்பில் பொலிஸ் தலைமையக குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரியான எஸ்.எஸ்.எம். சாதிக் நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

அதன்பிரகாரம், நீதிமன்றம் அவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரை கைது செய்யுமாறு கடந்த 17ஆம் திகதி சட்ட மாஅதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியிருந்ததாக எஸ்.எஸ்.எம். சாதிக் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், அன்றைய தினம் தனக்கு அத்தனகல்ல நீதிமன்ற முன்னிலையில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் 18ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும். சந்தேகநபர்களை கைது செய்யாமையின் ஊடாக நீதிமன்றத்தை அவமதித்திருப்பதாயின் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. You could have said I had a lose motion on that particular day.

    ReplyDelete

Powered by Blogger.