Header Ads



500 கோடி இழப்பீடுகோரி, வழக்குதாக்கல் செய்யவுள்ள பொன்சேகா


நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம் 500 கோடி ரூபா இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடையில் இன்று நடை பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு எதிராக உரிய முறையில் செயற்படவில்லை என கடந்த தேர்தல் நேரத்திலும் அதற்கு பின்னரும் பொன்சேகா தனக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களால், ஏற்பட்ட அவமதிப்பு மற்றும் அவதூறுக்கு எதிராக 50 கோடி ரூபா இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்யும் பணிகளை தனது சட்டத்தரணிகளிடம் ஒப்படைத்துள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நேற்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்திருந்த பொன்சேகா, தனது ஓய்வூதியம் 50 ஆயிரம் ரூபா எனவும் 100 மில்லியன் ரூபா கேட்டாலும் தன்னால் செலுத்த முடியாது எனவும் கூறியிருந்தார்.

மேலும் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டால், பணம் இல்லாததால், தான் அமைச்சரின் வீட்டுக்கு சென்று குடியேற நேரிடும், அப்போது அமைச்சர் தனக்கு உணவளிக்க நேரிடும் எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.



No comments

Powered by Blogger.