3 அமைச்சர்களை ரணில், பதவி நீக்குவாரா..?
அவன்கார்ட் ஆயுதக்கப்பல் விடயத்தை மறைக்க முற்படு;வதாக குற்றம் சுமத்தி மூன்று அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து விலக்கவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் திலக் மாரப்பன, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச மற்றும் வஜிர அபேவர்த்தன ஆகியோரையே பதவிவிலக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்துள்ளார்.
எனவே எதிர்வரும் திங்கட்கிழமை இது தொடர்பில் முடிவு ஒன்று தெரியவரும் என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Once again Ranil proves that he is inefficient to administer the country.
ReplyDeleteYes bro.
ReplyDeletePM should prove he could rule country efficiently otherwise should learn from MR.
Nasty politics