டுபாய்க்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்ட பெண் தற்கொலை - 3 பேர் கைது
டுபாய் நாட்டுக்கு தொழில் வாய்ப்புக்காக சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்ட பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பாக அந்த பெண்ணை அனுப்பி வைத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியாகத்தின் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி ஆவணங்களை தயாரித்து கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி டுபாய் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ராகம பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.
இது சம்பந்தமாக குறித்த பெண்ணின் கணவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பணியகத்தின் விசாரணைப் பிரிவு சந்தேக நபர்களை கைது செய்தது.
இவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

போலி ஆவணங்கள் தயாரிப்பதற்கு கிராம சேவகர்களின் பங்களிப்பு மிக முக்கியம் ஆகவே அவர்கள் யார் என்று அறிந்து அவர்களுக்கும் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்.
ReplyDelete