Header Ads



கன்னத்தில் அறைந்த, அநுரகுமார திசாநாயக்கா

-நஜீப் பின் கபூர்-

அரசியல் ஆர்வம் காரணமாக நமது நாட்டிலுள்ள எல்லா அரசியல்வாதிகளின் பேச்சுக்களையும் கேட்டிருக்கின்றேன்-பார்த்திருக்கின்றேன். ஊடக்காரன் என்றவகையிலும் பிற காரணங்களுக்காகவும் இவர்களில் பலபேரை நேரடியாக சந்தித்தும் இருக்கின்றேன். இன்னும் பல அரசியல் தலைவர்களுடன் அவ்வப்போது தொடர்பிலும் இருந்து வருகின்றேன்.

அந்த வகையில் இன்று பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய அவன்கார்ட் விவாதம் நடைபெறுவதாலும் அந்த விவாதம் தொலைக் கட்சியில் நேரலையாக இன்று 03.11.2015 ஒளி, ஒலிபரப்புச் செய்யப்படுவதாலும் எங்கும் செல்லாமல் விவாதம் பார்க்க தொலைக் காட்சி முன்னால் அமர்ந்து கொண்டேன்.

ஜேவிபி வேண்டுகோளுக்கு ஏற்ப இந்த அவன்கார்ட் விவாதத்துக்கான சந்தர்ப்பத்தை சபாநாயகர் கரு ஜெயசூரிய வழங்கி இருந்தார். பலர் பேசினார்கள். அவற்றையெல்லாம் கூர்ந்து ஆவதானித்துக் கொண்டிருந்தேன். வார ஏட்டுகளுக்கு கட்டுரை எழுதும் போது சேர்த்துக் கொள்ள அவர்கள் முக்கிய தகவல்கள் எதையாவது வழங்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பில்!

இப்போது ஜேவிபி. அணுரகுமார திசாநாயக்காவின் சந்தர்ப்பம். அவரது பல பேச்சுக்களை நான் நெடுநாளாக அவதானித்து வருகின்றேன். இன்றும் அவர் தனக்கே உரிய பாணியில் சபையின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தார்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசையும் தற்போதைய நல்லாட்சியையும் அவர் மிகக் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்துக் கொண்டிருந்தார். பாராளுமன்ற அமர்வுகளில் கூச்சல் போடுகின்றவர்கள் அனைவரும், கல்லூரி அதிபர் வரும் போது பாடசாலை மாணவர்கள் அடங்கிப்போய் ஒதுங்கித் தங்களை நல்லவர்களாக அதிபரிடத்தில் காட்டிக் கொள்ளுவது போல் ஆளும் தரப்பிலும் எதிர்த் தரப்பிலும் உள்ள பலர் அவரது பேச்சுக்கு தங்களது ஒருமைப்பாட்டைத் தமது உணர்வுகள் செய்கைகள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருந்ததை அங்கு பார்க்க கூடியதாக இருந்தது.

ஒரு சந்தர்ப்பத்தில் அணுர குமாரவின் கருத்துக்கு நையாண்டிக் கதையொன்றைச் சொல்ல முனைந்த பொலன்னறுவைப் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான வசந்த நாணயக்கார அணுரகுமார திசாநாயக்கவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு அப்பாவியாக தனது ஆசனத்தில் அசடுவழிய அமர்ந்து கொண்டதை அங்கு பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

அவன்கார்ட் விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணாக பிரதமர் ரணில் நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.  சில சம்பவங்களையும் ஆதாரங்களையும் இதற்காக அவர் அங்கு முன்வைத்தார்.

ஒரு சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் முன் வரிசையில் இருக்கும் ஐ.தே.க.அமைச்சர்களைப் பார்த்து நீங்கள் சந்தையில் விற்கப்படுகின்ற பொருட்களைப் போன்றவர்கள். அதிலும் சிலர் அழுகிய மீன்கள் சந்தையில் குறைந்த விலைக்கு விற்கப்படுவது போல் மலிவான விலைக்கு விலை போய் இருக்கின்றீர்கள்.

இந்தப் பாராளுமன்றம் அழுகிய மீன்கள் இருக்கின்ற சந்தை போல் இருக்கின்றது. உங்களால் இந்தப் பாராளுமன்றம் பெரும் நாற்றமாக இருக்கின்றது. ஏன் இப்படி அசிங்கமாக நடந்து கொள்கின்றீர்கள்.

இங்கு இருக்கின்ற பல முக்கிய புள்ளிகள் மஹிந்த அரசின் கள்வர்களைப் பாதுகாப்பதற்காக வக்காளத்து வாங்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்கின்ற முயற்சியில் இறங்கி இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்களை பெயர் குறிப்பிட்டு என்னால் அடையாளப்படுத்த முடியும் ஆனால் நான் அப்படி இங்கு நடந்து கொள்ள மாட்டேன்.

தங்களைக் காப்பற்றிக் கொள்வதற்காக நல்லாட்சிக்காரர்கள் பின்னால் திரிகின்ற சிலர் எம்மையும் சந்திக்க ஒரு சந்தர்ப்பம் கேட்டார்கள் நாங்கள் அவர்களுக்குக் கூறிவிட்டோம் உங்களுடன் பேசுவதற்கு எமக்கு -ஜேவிபிக்கு எந்த அவசியமும் கிடையாது எதையாவது சொல்வதாக இருந்தால் விசாரணை நடக்கின்ற இடத்தில் இது பற்றி நீங்கள் போய்க் கூறுங்கள் என்று அவர்களுக்குச் சொல்லி விட்டோம், என்று அங்கு தனது வாதத்தைமுன்னெடுத்த போது வழக்கமாக கூச்சலும் கூத்தும் நடக்கின்ற பாராளுமன்றம் அணுரகுமார முன்னால் அடங்கிப் போய் நின்றதை இன்று பார்க்க முடிந்தது.

இந்த அவன்கார்ட் விவகாரத்தில் உள்ள மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் இதற்கான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டி ஐ.தே.க. அமைச்சர் திலக்க மாரப்பன அந்த நிறுவனத்தில் குற்றம் சாட்டப்படுகின்றவர்கள் தரப்பில் சட்ட ஆலோசகராக இருக்கின்றார் என்பதுதான்.

ஒரு சந்தர்ப்பத்தில் பிரதி சபாநாயகர் அமைச்சர் திலக்க மாரப்பனவைப் பார்த்து நீங்கள் இப்போது கருத்துக்கள் சொல்வது உங்களுடைய வாடிக்கையாளர் சார்பிலா அல்லது  அரசாங்கத்தின் துறை சார்ந்த அமைச்சர் என்றவகையிலா என்று கேட்ட போது சபை எங்கும் சிரிப்பொலி கேட்டது.

5 comments:

  1. நாட்டின் எதிர்காலத்திற்காக அடுத்த மக்கள் தெரிவாக JVP அமைவது மிகப் பொருத்தமானது.2

    ReplyDelete
  2. Ranil and my3's blunder has surfaced..............................

    ReplyDelete
  3. Useless people. Without voting for JVP nw telln dese story is useless

    ReplyDelete
  4. Useless people. Without voting for JVP nw telln dese story is useless

    ReplyDelete

Powered by Blogger.