Header Ads



UK - இலங்கை ஹஜ் குழு, நாடு திரும்பியது (படங்கள்)

பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த ஹஜ் வழிகாட்டியான அல் ஹாஜ் அமானுல்லா கமால்தீன் தலைமையில் ஐக்கிய இராச்சியத்திலுள்ள RJ Travels உரிமையாளரான அல் ஹாஜ். எம். ஜே. எம். ரிஸ்வி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் குழு நேற்று நாடு திரும்பியது. 

இக்குழுவை வரவேற்பதற்காகவும் அவசரமாக ஹாஜிகளை விமான நிலையத்திலிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகவும்   ஜித்தா சர்வதேச விமான நிலைய மூத்த அதிகாரியான எம். எச.; முஹம்மத் ரிள்வான் அவர்கள் சமூகமளிதிதிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இக் குழு மக்காவில் நடந்த 'கிரேன்' அசம்பாவிதம் நடந்த இடத்தை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் புனித கஃபாவிலும் அரபாவிலும் இலங்கை முஸ்லிம்களுக்காகவும் முழு உலக முஸ்லிம்களுக்காகவும் முழு மனித சமுதாயத்தின் ஹிதாயத்துக்காகவும் விசேட துஆ பிராத்தனை செய்தார்கள். 

இந்த குழுவில் தமிழ் மொழியிலும் ஆங்கிலத்திலும் ஹஜ் விளக்கவுரைகள் நடப்பதால் லண்டனைச் சேர்ந்த அனேகமான இலங்கையைச் சேர்ந்த ஹாஜிகள் இக்குழுவில் சென்றிருந்தனர் 

மினாவில் சன நெரிசல் அசம்பாவிதம் நடந்த நேரம் இக்குழு பெரிய ஜமராத்தில் கல் எறிந்து கொண்டிருந்தது. அல்லாஹ்வின் உதவியால் அனுபவம் வாய்ந்த வழிகாட்டியான அல் ஹாஜ் அமானுல்லாஹ் கமால்தீன் அவர்கள் ஹாஜிகளை குகை வழியாக கூடாரத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றதால் ஹாஜிகள் மயிரிலையில்  உயிர் தப்பினர்.

இக்குழுவில்; இலங்கை ஹாஜிகளுடன் பல்வேறு நாட்டைச் சேர்ந்த சுமார் நாணூறு ஹாஜிகள் ஹஜ்ஜை நிறைவேற்றினர.; அனைத்து ஹாஜிகளும் திருப்தி கரமாக தமது கடமைகளை நிறைவேற்றி நாடு திரும்பியிருக்கிறார்கள.; இன்சா அல்லாஹ் எதிர்வரும் வருடங்களில் மேலும் இலங்கையை சேர்ந்த ஹாஜிகள் இக்குழுவில் செல்லவிருப்பது குறிப்பிடத் தக்கது.  

தகவல்: 
அப்துல் மலிக் சரீப். 
லூடன் 


3 comments:

  1. Dear Brothers, You make HAJJ for the sake of Allah... If it is purely you should not expect any reputation of you HAjj by posting it to public.

    May Allah Guide us with good intention and way of Muhammed (sal)

    ReplyDelete
  2. May Allah Accept all of your haj.
    Proud to serve guest of Allah.
    Rilwan Haniffa - Jeddah Airport

    ReplyDelete
  3. A nice commercial presented in news form

    ReplyDelete

Powered by Blogger.