"MUMMY I LOVE YOU" சொல்லச்சொல்ல 3 பிள்ளைகளை கொலைசெய்த தாய் - கதறியழுத பொலிஸார்
-கண்ணன்-
அன்று மாலை , சுமார் 5 மணி அளவில் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் உள்ள , பொலிஸ் நிலையம் ஒன்றுக்கு அவசர அழைப்பு வந்தது. நான் எனது 3 பிள்ளைகளையும் கொன்றுவிட்டேன் என்று கதயறியவாறு ஒரு தாய் தெரிவித்தார். அவர் பொலிசாருக்கு அழைப்பை மேற்கொள்ள முதலே தனது காதலனுக்கு அழைப்பை ஏற்படுத்தி 3 பிள்ளைகளை கொன்று விட்டதாகவும் தெரிவித்து இருந்தார். காதலனும் தனது காரில் பதறி அடித்து ஓடிவர. பொலிசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தார்கள். கத்தியை ஒரு துப்பாக்கி போல பிடித்து பொலிசாரை ஏமாற்ற நினைத்தார் அந்த தாய். ஏன் என்றால் அப்படி என்றால் தான் பொலிசார் தன்னை சுடுவார்கள் என்று அவர் அறிந்திருந்தார். ஆனால் என்னமோ தெரியவில்லை வழமையாக அமெரிக்க பொலிசார் சுட்டு தள்ளிவிடுவார்கள். ஆனால்இச்சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் , அவரின் கைகளில் இருப்பது துப்பாக்கி அல்ல என்பதனை நிதானமாக யோசித்து கண்டறிந்தார்கள்.
தன் கைகளை வெட்டி தன் உயிரை மாய்த்துக்கொள்ள அவர் முன்னர் எத்தணித்துள்ளார்என்பதனையும் பொலிசார் அறிந்து கொண்டார்கள். அது நடக்காமல் போகவே பொலிசாரிடம் சூடு வாங்கியாவது இறந்துவிடவேண்டும் என்று அவர் நினைத்துள்ளார். அதுவும் நடக்காமல் போகவே , என் மகள் என்னை நிறையப் பிடிக்கும் என்று மீண்டும் மீண்டும் சொன்னாள். நான் அதனைக் கேட்டுக்கொண்டு தான் அவளை கொலைசெய்தேன் என்று மீண்டும் மீண்டு அழுது கொண்டு , தான் கைதாகும் வேளைகளில் அந்த தாய் கூறினார். அவர் பெயர் ஜெசீக்கா மக்காத்தி(33). இவருக்கு 3 பிள்ளைகள். லேசி என்னும் பெண்(7) சகோதரன் ஃபில்(6) தம்பி கிறிஸ்டொபர்(5மாதக் குழந்தை). முதலில் 5 மாதக் குழத்தையின் கழுத்தை வயரால் நெரித்துக் கொன்ற ஜெசீக்கா பின்னர் 6 வயது ஃபில்லின் கழுத்தை நெரித்துள்ளார். அம்மா எனக்கு உங்களை நிறையப் பிடிக்கும். என்னை கொல்லவேண்டாம். "ஐ லவ் யூ மம்மி" ( I LOVE YOU MUMMY) என்று மீண்டும் மீண்டும் கத்தியுள்ளான் ஃபில்.
அவனையும் கொன்று விட்டு இறுதியாக இந்தக் கொலைகள் அனைத்தையும் பார்த்த , 7 வயதான லேசி பாத்ரூமில் ஒளிந்து இருந்துள்ளார். அங்கேயும் சென்று குளிக்கும் இடத்தில் உள்ள நீர் தொட்டியில் நீரை நிரப்பியுள்ளார் ஜெசீக்கா. தாம் நீரில் மூழ்கி இறக்கப்போவதை 7 வயதான லேசி அறிந்தார். உடனே அம்மா PLEASE .....PLESE ... நான் என்ன தவறு செய்தேன் ? ஐ லவ் யூ மம்மி( I LOVE YOU MUMMY) என்று பல தடவை கத்தி தனது அன்பை வெளிப்படுத்தி அம்மாவை சாந்தப்படுத்த முயற்ச்சித்தார். ஆனால் எதுவுமே பலிக்கவில்லை. 7 வயதான லேசியை நீரில் மூக்கி கொலை செய்தார் அம்மா(ஜெசீக்கா). இவை அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தவை, இறுதியாக கொலை செய்யப்பட்ட 7 வயதான லேசி , பாத்ரூமில் ஒளிந்து இருந்தவேளை , அம்மா உங்களை எனக்கு ரெம்பவும் பிடிக்கும் என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்திருந்துள்ளார் என்று பொலிசார் கண்ணீர் மல்க தெரிவித்தார்கள்.
சம்பவ இடத்திற்குச் சென்ற புலனாய்வுப் பொலிசார் ஒவ்வொருவரும் அழுதவாறே வெளியே வந்தது, அனைவரது கண்களிலும் நீரை வரவளைத்தது. நான் வாழ தகுதி அற்றவள் என்னை சுட்டு விடுங்கள் என்று வெளியே வந்த ஜெசிக்கா புலம்பியுள்ளார். தற்போது அமெரிக்க சிறையில் இருக்கும் ஜெசீக்காவிடம் எதனைக் கேட்டாலும் , என் மகள் சாகும்போது "என்னை ரெம்பவும் பிடிக்கும்" என்று கூறினாள். ஆனால் நான் தான் கொலை செய்து விட்டேன் என்று மீண்டும் மீண்டும் வக்கிலீடம் கூறி வருகிறார். இவர் மன நிலை பாதிக்கப்பட்டு இருக்கிராரா என்று பார்த்தால் அதுவும் இல்லை என்கிறார்கள். கொலை செய்யும் வேளையில் கூட அவர் சரியான மன நிலையில் தான் இருந்துள்ளார் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால்ஜெசீக்கா மரணதண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

It is very very sad incident. But if happend in saudi or any other Islamic country the comments fly badly about Muslims.
ReplyDeleteஜஃப்னா முஸ்லீம் நிருவாகத்தினரே,
ReplyDeleteஇப்படியான செய்திகளை இனியும் பிரசுரிக்காதீர்கள். இந்தச் செய்திகள் ஒருவேளை உங்கள் இணையத் தளத்திற்கு அதிர்ச்சி மதிப்பைத் தரக்கூடும். ஆயினும் அதனால் தீமைகளன்றி நன்மைகள் விளையப்போவதில்லை.
முடிந்தால் உடனடியாக நீக்கி விடுங்கள்!
Mini You are correct
ReplyDeleteWhy sister Jeslya says not to publish. This must publish and show these people true colour. The so called civilized people who's mentality, brutality.greediness to others wealth and immorality should be shown to the world. according to survey their crime rate and suicidal rate specially among the forces who worked in Iraq and Afghanistan alarmingly high shows that is curse for their atrocities committed in Iraq Afghanistan and syria.
ReplyDeleteஇதையே ஒரு முஸ்லிம் பெயருள்ளவள் செய்திருந்தால் மேலுள்ள (Jessly) நபருக்கு இனித்திருக்கும் அதை எப்படியாவது வரலாற்றுடன் முஸ்லிம்களை வலுக்கட்டாயமாகவாவது இணைத்து கருத்துத் தெரிவித்திருப்பார் இது முஸ்லிம் இல்லை என்றானதும் நீக்க ஆலோசனை வழங்கப்படுகின்றது மாட்டிறைச்சி உண்டான் என்ற வதந்திக்காக அடித்துக் கொலை செய்யப்பட்ட முஸ்லிமுக்கு சார்பாக கருத்து வரவில்லை (உள்ளுக்குள் சந்தோசப்பட்டிருப்பர்) ஆனால் இந்துத் தீவிரவாதி ராம்கோபாலின் கருத்துக்களக்கு வெள்ளையடித்து அதை பல்முகமாக்கி (இது அனைத்து மதவாதிகளினதும் பொதுக் கருத்தாக மாற்ற நினைக்கின்றனர்) எனக்கு இவர்களைப் பற்றிக் கவலை இல்லை ஆனால் இவர்களை முஸ்லிம் சகோதரி என்று ஏமாறும் எங்கள் சகோதரர் Voice Srilanka போன்றர் இவர்களால் ஏமாற்றப்படக் கூடாது இவர் நியாயவாதிகளாக இருந்திருந்தால் முதலில் முன்னுள்ள இந்திய செய்திக்கல்லவா முதலில் பின்னுhட்டல் செய்திருக்க வேண்டும் இவர்களின் எண்ணம் இன்னுமா எமது வாசகர்களுக்குப் புரியாமல் விடும் அல்வாh இவர்களைப் போல் பலருக்கு நேர்வழியைக் காண்பித்தவன் இவர்களுக்கு தன் நேர்வழிக் காட்டுவானாக!
ReplyDeleteஜிப்ரி நீங்கள் சொல்வதுபோல் இந்த ஜஸ்லியா வுக்கு இஸ்லாத்துக்கு எதிரானவர்களை நன்றாக பிடிக்கும்.ஜப்னா முஸ்லிம் இந்த ஜஸ்லியாவை முதலில் இனம் கண்டு இவரின் பி்ன்னூட்டங்களை பதிவிடுங்கள்.இலலையேல் இவருக்கு தகுந்த பதிலை வாசகர்களாகிய நாங்கள் எழுதுகிறோம் தணிக்கை செய்யாமல் இடுங்கள் அப்போது அவரக்கு தெரியும் இஸ்லாத்தின் உப்பு புளி.வழிகெட்டவர்கள் மற்றவர்களையும் வழிகேட்டின் பக்கம் இழுப்பது எந்த வகையில் நியாயம்
ReplyDeletegood comments against this jesliya ... keep it up my brothers....
ReplyDeletewowo very nice comment by Jiffry & Mustafa Jawfer ,we need give right answer who got brainwash by Weston media to save humankind .
ReplyDelete