Header Ads



பேஸ்புக்கில் ஜனாதிபதி மைத்திரியை அவமதிப்பு செய்தவர், நீதிமன்றத்தில் சரணடைந்தார்

முகநூலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவதூறு செய்த நபர் ஒருவர் நீதிமன்றில் இன்று சரணடைந்துள்ளார்.

பிரதேச அரசியல்வாதி ஒருவரே இவ்வாறு நீதிமன்றில் இன்று முன்னிலையாகியுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய எதிரில் இன்று குறித்த சந்தேக நபர் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை அவதூறு செய்யும் வகையில் முகநூலில் புகைப்படங்களையும் தகவல்களையும் பிரசுரித்தார் என குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த பிரச்சாரம் தொடர்பில் நீண்ட காலமாக பொலிஸார் குறித்த நபரை தேடி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலைமறைவாகியிருந்த பிரதேச அரசியல்வாதியான சம்பத் அத்துகோரல என்பவரே இவ்வாறு இன்று நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

ஜனாதிபதியையும் பெண் ஒருவரையும் தொடர்புபடுத்தி இந்த முகநூல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.