Header Ads



மகிந்தவின் மகன்களை தீட்டித்தீர்த்த, சஜின் வாஸ் மனைவி... விபரம் இணைப்பு)

ராஜபக்சர்கள் தொடர்பில் வரலாற்று காட்டிகொடுப்பை செய்த சஜின்  வாஸ் குணவர்தனவின் மனைவிக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்திய ராஜபக்சவின் மகன்மார் இருவருக்கு மீண்டும் ஒரு போதும் அழைப்பேற்படுத்தாத வகையில் சஜினின் மனைவி திட்டியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரகள் தெரிவித்துள்ளன.

சஜின் வாஸ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தொலைபேசி அழைப்பிற்கு பதில் வழங்காமையினால் ராஜபக்சவின் மகன்மார்கள் (நாமல் மற்றும் யோஷித) சஜினின் வாக்குமூலம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுகொள்வதற்காக சஜினின் மனைவிக்கு அழைப்பேற்படுத்தியுள்ளனர்.

தற்போதுவரையில் கொழும்பில் வசிக்கும் அவர் ராஜபக்சவின் மகன்மார் இருவருக்கும் காதில் விரலை வைத்துகொள்ளும் அளவிற்கு பதலளித்துள்ளார்.

இப்பொழுது தான் தங்களுக்கு எங்களை நினைவுக்கு வந்ததா?... நாங்கள் உயிரோடு இருக்கின்றோமா இல்லையான என்றாவது தேடி பார்த்தீர்களா?

நான் தான் சஜினுக்கு அனைவரையும் காட்டிகொடுக்குமாறு கூறினேன். தங்களின் தந்தை அதிகாரத்தில் இருந்த போது மனிதர்களை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விட்டார்.

உங்கள் தந்தை எங்களுக்கு அதனை செய்ய முயற்சித்து தான் தற்போது இவ்வாறானதொரு நிலை உருவாகியுள்ளது.

சஜின் இதுவரையில் கூறியது கொஞ்சம் தான். நாளை அல்லது நானை மறுதினம் மீதமுள்ளவற்றையும் கூறி விடுவார்.

இதற்கு பின்னர் எங்களுக்கு அழைப்பேற்படுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதலளித்த ராஜபக்சவின் மகன், நாங்கள் இரு தரப்பும் இது குறித்து பேசி தீர்மானத்துக்கொள்வோம். நாங்கள் சண்டை போட்டு கொண்டால் அதன் பலன் எங்கள் எதிராளிகளுக்கு தான்.

வேறு ஒரு நாள் இவற்றை குறித்து பேசி தீர்மானித்து கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்கள்.

No comments

Powered by Blogger.