சகோதரர் சஜாத்திற்கு, கொலை அச்சுறுத்தல்
இலங்கை தமிழ் பேசும் மக்கள் அதிகமாக பின்தொடரும் இலங்கை ஊடக அமைச்சில் செய்தி தளமாக பதிவு செய்யப்பட்டுள்ள மடவளை நியுஸ் செய்தி தளத்தின் நிருவாக இயக்குனர் எம்.எல். சஜாத் மொஹமட்டிற்கு கொலை அச்சுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு (30) வேளை 12 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
மடவளை நியுஸ் நிருவாகம் தமது வழக்கரிஞரின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் மா அதிபரிடத்தில் 118f3a6d72V032542318 என்ற முறைப்பாட்டு இலக்கத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment