Header Ads



"தேசிய கீதம் மகிந்தவுக்கு ஆதரவாக, துஷ்பிரயோகம் செய்யபட்ட விவகாரம்"

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக, தேசிய கீதத்தை துஸ்பிரயோகம் செய்தததாக தொலைக்காட்சி அலைவரிசைகள் சிலவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டின் தேசிய கீதத்தை சில தொலைக்காட்சி அலைவரிசைகள் பிழையாக பயன்படுத்தியது என குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான டி.வி.டி ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டே மேலதிக நீதவான் பிரியந்த லியனகெ, தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு பொலிஸ் தலைமையகத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிமன்ற பணியாளரும், ஊடகவியலாளருமான தங்கவேலு ஜெயக்குமார் என்ற நபரினால் இது தொடர்பான மனு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு அரசாங்க தொலைக்காட்சிகளும் ஒரு தனியார் தொகை;காட்சியும் தேசிய கீதத்தை திரிபுபடுத்தி அவமரியாதை செய்யும் வகையில், மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒளிபரப்புச் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27, 28 மற்றும் 29ம் திகதிகளில் குறித்த தொலைக்காட்சி அலைவரிசைகளில் இவ்வாறு தேசிய கீதம் திரிபுபடுத்தப்பட்டு பிழையாக ஒளிபரப்புச் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசிய கீததத்தின் வரிகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பிரச்சாரத்திற்காக திரிபுபடுத்தி பாடி ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளார்.

தேசத்தைப் போற்றிப் புகழ்ந்து பாட பயன்படுத்தும் வரிகள், மஹிந்தவை புகழ்ந்து பாடுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய கீதம் தனிப்பட்ட அல்லது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது. அவ்வாறு மேற்கொள்வது சட்ட ரீதியில் குற்றமாகும்.

இந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் அளித்த அரச தொலைக்காட்சி பிரதானிகள், அவ்வாறு திரிபுபடுத்தப்பட்ட தேசிய கீதம் ஒளிபரப்புச் செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.

குறித்த திகதிகளில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய டி.வி.டி. ஆவணங்களை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய வழங்க முடியும் என தனியார் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.