Header Ads



ஜேர்மனிக்கு வருமாறு, மைத்திரிக்கு அழைப்பு

ஜேர்மன் ஜனாதிபதி எஞ்சலோ மர்கெல் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. 

கடந்த வாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் பிராங்க் வோல்டர் ஸ்டெயின் மேயர் மூலமாக இந்த அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது.

ஜேர்மன் ஜனாதிபதியின் இந்த அழைப்பிதழை ஏற்றுக்கொள்வதாகவும் தனது விஜயத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி அமைச்சர் ஸ்டெயின் மேயரிடம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையின் ஏற்றுமதிகளில் சுமார் 5 சதவிகிதத்தைக் கொள்வனவுசெய்யும் ஜேர்மனி, உலக நாடுகள் மத்தியில் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை ஊக்குவிக்கும் ஐந்தாவது பெரிய சந்தையாக விளங்குகிறது.

கடந்த வருடத்தில் ஜேர்மனி இலங்கையிடமிருந்து பெற்ற ஏற்றுமதிகளின் மொத்தப் பெறுமதி 824 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இவ்வருடத்தில் அந்தப் பெறுமதியை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துக்கொள்ள இலங்கை அரசு முயற்சி செய்து வருகிறது.

No comments

Powered by Blogger.