Header Ads



சுயாதீனக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் தயார்

19வது அரசியல் அமைப்பு திருத்தத்தின்கீழ் அமைக்கப்படவுள்ள 10 சுயாதீனக் குழுக்களுக்காக சுமார் 500பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அரசியல் அமைப்பு சபைக்கு இந்த பரிந்துரை பெயர்கள் கிடைத்துள்ளன. 

ஏற்கனவே குறித்த குழுக்களுக்கு பெயர்கள் தருமாறு அரசியல் அமைப்பு சபை, தொழில்சார்ந்தோரிடம் கோரியிருந்தது.

இதற்கமையவே குறித்த எண்ணிக்கையான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அரசியல் அமைப்பு சபை, தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுச்சேவைகள் ஆணைக்குழு, தேசிய காவல்துறை ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு,

லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய கொள்முதல் ஆணைக்குழு, வரம்புப்படுத்தல் ஆணைக்குழு என்பவற்றுக்கு உறுப்பினர்களை நியமிக்கவுள்ளது.

இது எதிர்வரும் 9ஆம் திகதியன்று முடிவுறுத்தப்படவுள்ளது.

அரசியல் அமைப்பு சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், அமைச்சர்கள்- பாட்டலி சம்பிக்க, விஜயதாஸ ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், குடியியல் உறுப்பினர்கள் ஏ டி ஆரியரட்ன, ராதிகா குமாரசுவாமி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அஸீஸ் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.