வாழைச்சேனை கடதாசி ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்க அமைச்சரவை பத்திரம்
வாழைச்சேனை தேசிய கடதாசி நிறுவனத்தின் ஊழியர்களின் சம்பளத்தை வழங்க திறைசேரியிடம் நிதி கோறி கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்ரவை பத்திரத்தினை செப்டம்பர் மாதம் சமர்ப்பித்துள்ளார்.
வாழைச்சேனை கடதாசி ஆலையின் செயற்பாடுகள் கடந்த அரசாங்கத்தின் போது இயங்காத நிலையில் அங்குள்ள உழியர்கள் தமது சம்பளத்தை பெறுவதற்கும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.புதிய அரசாங்கத்தின் மேற்படி கடதாசி கூட்டுத்தாபனம் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்த தொழிற்சாலையின் செயற்பாடுகளை மீள புனரமைத்து இதனை உற்பத்திகளை மேற்கொள்ளும் வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இவ்வருடம் மார்ச் மாதம் அமைச்சரவைப் பத்திரமொன்றினை சமர்ப்பித்ததுடன்,தயாரிப்பு நடவடிக்கை மற்றும் ஊழியர்களின் சம்பள கொடுப்பனவுகளுக்கும் என 110 மில்லியன் ரூபாய்களை கோறியிருந்தார்.
அமைச்சர் எடுத்துக் கொண்ட முயற்சியினால் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரைக்கும் ஊழியர்களின் சம்பளத்தினை கொடுப்பதற்காக 54 மில்லியன்கள் தேவைப்பட்டது.வாழைசசேனை கடதாசி கூட்டுத்தாபனத்தின் வருமானம் ஈட்டும் உற்பத்திகள் இடம் பெறாததினால் திறைசேரியிடம் கோறப்பட்ட நிதியில் இருந்து முதற்கட்டமாக 51.5 மில்லியன்கள் ரூபாய்களை விடுவிக்கபட்டிருந்த நிலையில் ஏனைய நிதியினை பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் அமைச்சர் றிசாத் பதியுதீ்ன் தலைமையில் அதிகாரிகள் முனைப்புடன் ஈடபட்டுள்ள நிலையில் மீண்டும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதே வேளை நஷ்டத்தில் இயங்கும்.மற்றும் குறைந்த வருமானங்களை பெறும் அரச நிறுவனங்கள் தொடர்பிலும்,மேற்குறிப்பிட்ட வாழைச்சேனை கடதாசி நிறுவனத்தின் செய்றபாடு தொடர்பில் ஆராய ஏற்கனவே செயற்றிட்ட கூட்டிணைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் தனது ஆய்வுகளை மேற்காண்டுவருகின்றார்.இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை வாழைச்சேனை கடதாசி நிறுவனத்தின் ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கு திறைசேரியிடம் இருந்து நிதியினை விடுவிக்குமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment