சேயாவை கொன்றது நானே - கொண்டயாவின் சகோதரன் உரிமை கோரல்
சிறுமியைக் கொலை செய்தவன் நானே' என நான்காவது சந்தேக நபரான கொண்டயாவின் சகோதரன் சமன் ஜயலத் ஒத்துக்கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறையினர் இன்று (05) நீதிமன்றில் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கொண்டயா மற்றும் அவரது சகோதரன் ஆகியோர் இன்று (05) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே CID இனர் இதனை நீதிமன்றில் தெரிவித்தனர்.
மேலும் சிறுமியைக் கொலை செய்தவர் தனது சகோதரன் என கொண்டயா ஏற்கனவே பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2.................
கொடதெனியா சிறுமி சேயா சவ்தமியை தானே கொலை செய்ததாக, கொண்டையா என்பவரின் சகோதரர் ஒப்புக் கொண்டுள்ளார்.
அண்மையில் கொடதெனியா பகுதியில் ஐந்து வயது சிறுமியான சேயா துஷ்பிரயேகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் 17 வயது மாணவன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
பின்னர் கொண்டையா என அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்த என்பவர் கைதானதோடு தானே கொலை செய்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
இந்தநிலையில் கடந்த வாரம் குறித்த கொலை தொடர்பில் கொண்டைய்யாவின் சகோதரர் கைதுசெய்யப்பட்டார்.
தற்போது இவர் தானே அந்தக் கொலையை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொண்டையாவை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் முன்னதாக கைதான சிறுவன் உள்ளிட்ட இருவரின் டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கை குற்றத்துடன் ஒத்துப் போகாமையால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பச்சிலம் உயிரை காம இச்சைக்காக கொலைசெய்துவிட்டு அதை பங்கு போடுகின்ரவர்கள் இருவருடன் முடிந்துவிடுமா? இல்லை இன்னும் இருப்பார்களா? என்னதான் இருந்தாலும் தண்டனைகள் இழுத்தடிப்பாகவே இருக்கின்ரது இவ்வாரான குற்றவாழி[காவாலி]கலுக்கு
ReplyDeleteIf some one raped of politicians daughter they will take stringent action against the criminal.criminal . but if the public they will not take action. The reason for increase the criminal the law not regular and the criminal go jail and return after 6 or 7 months and again they will do
ReplyDelete