Header Ads



பாலிதவின் ஆத்திரம்...!


கள்வர்கள் மோசடிகாரர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வீதியில் இறங்கி நடக்க முடியவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். 
கடந்த தேர்தல் காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கள்வர்களை கைது செய்வதாக நாம் கூறியிருந்தோம்.

எனினும் தற்போது எமது அரசாங்கம் இவ்வாறானவர்களுக்கும் அமைச்சுப் பதவி வழங்கியுள்ளது. இதனால் எம்மால் வீதியில் இறங்கி நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தததன் பின்னர் எமது ஊரில் மட்டும் தொழில் வாய்ப்பு இல்லை என்ற விரக்தியினால் மூன்று இளைஞர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் தொழில் வாய்ப்பு கோரி மக்கள் வரிசையில் வருகின்றனர்.

நிவாரணங்கள் கோருகின்றனர், எனினும் எம்மால் செய்யக்கூடியது எதுவுமில்லை. இதனால் நாம் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாது மறைந்து ஒளிந்தே இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்யும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என பாலித தெவரப்பெரும கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.