மைத்திரி - ஹிஸ்புல்லா பிரத்தியேக சந்திப்பு, முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு
-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே முக்கியத்துவமிக்கதும், பிரத்தியேகமானதுமான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.
தன்மீது இலங்கை முஸ்லிம் சமூகம் நம்பிக்கை கொண்டுள்ள போதிலும், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு முஸ்லிம் சமூகத்திடமிருந்து மிகக்குறைந்த அளவிலான வாக்குகளே கிடைக்கப்பெற்றதாக ஹிஸ்புல்லாவிடம் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி மைத்திரி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் முஸ்லிம்களிடமிருந்து அதிகரித்த ஆதரவை திரட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்குகிழக்கு மாகாணங்கள் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குரிய சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிறப்பு பிரதிநிதியாக அமைச்சர் ஹிஸ்புல்லாவை நியமிப்பது பற்றியும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதுடன், மூத்த அரசியல்வாதி என்றவகையில் ஹிஸ்புல்லாவுக்கு முழு அமைச்சுப் பதவி வழங்குவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், முழு அமைச்சராக இருந்து முஸ்லிம் சமூகத்திற்கும், நாட்டிற்கும் பங்காற்ற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது ஹிஸ்புல்லாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பொதுபலசேனா ஆதரவு நிலைப்பாட்டினால், முஸ்லிம்களின் ஆதரவை தாம் இழக்க நேரிட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால, இந்நிலையை மாற்றியமைக்கவும், எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தவொரு அநீதி நிலையும் ஏற்படாதிருக்கவுமான உறுதிமொழியையும் இதன்போது வழங்கியுள்ளார்.
மேலும் முஸ்லிம் சமூகத்திற்கு தொழில் வாய்ப்புகளை வழங்கவும், கல்வித்துறையில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வு காணவும், காணி விவகாரம், மீள்குடியேற்றம் உள்ளிட்ட உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்பொருட்டு உடனடி நடவடிக்கைகளை தான் ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது அமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

ஒரு மனிதனுக்கு இறைவன் நன்மையை நாடிவிட்டால் மனிதர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தடுக்க முயற்சி செய்தாலும் அது முடியாது போய்விடும் .அதேபோல் ஒரு மனிதனுக்கு இறைவன் தீமையை நாடிவிட்டால் அதனை அனைத்து மனிதர்கள் ஒன்று சேர்ந்து தடுத்த போதிலும் அது முடியாது போய்விடும் .இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிறந்த மனித தொடர்பாடல் மிக்கவராக ஹிஸ்புல்லாஹ் அவர்கள் காணப்படுகின்றார் .
ReplyDeleteMuslim politicians only wish to be a minister or cabinet minister. they doesn't like to serve or to be a voice of Muslims whatever they have in their hands. Not only Hisbullah all the politicians. They want to higher ministry post to serve the society. So they should learn from the Tamil politicians.
ReplyDeleteமுஸ்லிம் சமூகத்துக்கும் இந்த நாட்டுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால முன்னேற்றத்துக்குமான மிகச் சரியான சிந்தனையும் முடிவுமாகும், ஆனால் இந்த பொறுப்பு பிழையான ஒரு நபரிடம் ஒப்படைக்க உள்ளது மிகவும் பிழையான முடிவாகும் என்பது எமது கணிப்பாகும்.
ReplyDeleteஹிஸ்புல்லா அவர்களின் கடந்த கால அரசியல் முன்னெடுப்புக்களும் அவரது சுயநலமான, நம்பகத்தன்மையற்ற முஸ்லிம் சமூகத்துக்கு மிகவும் ஆபத்தான முடிவுகளை எடுத்தமை பற்றி குறிப்பிடுவது இச் சந்தர்பத்தில் மிகவும் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறோம்.
1. கனவான் ஒப்பந்தம் மீறப்பட்டமை. ( தலைவர் அஷ்ரப் அவர்களால் செய்யப்பட்ட ஏற்பாடு ஏறாவுருக்கு கொடுக்கப்படவேண்டிய எம்பி பதவி )
2. சாராயத் தவறணை ஒன்றுக்கான அனுமதி கொடுத்தல் சம்பந்தமாக உதவி புரிந்தமையால் தலைவர் அஷ்ரப் அவர்களால் கட்சியில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டமை.
3. தம்புள்ளை பள்ளிவாசல் சம்பந்தமான உண்மைக்கு புறம்பான அறிக்கை.
5. கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரித்து முஸ்லிம் சமூகத்துக்கே அச்சுறுத்தலாக இருந்தமை.
எதிர்காலத்தில் இவரது அரசியல் முன்னெடுப்புக்கள் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Hon. Hizbullah is most suitable for cabinet ministry
ReplyDelete