இலங்கையின் கல்விமான்கள், அரசியல் தலைவர்களுக்கு கூட்டாக கடிதம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைபேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை பல்கலைகழகங்களை சேர்ந்த 40 ற்கும் மேற்பட்ட கல்விமான்கள் ஐனாதிபதி, பிரதமர் , எதிர்கட்சி தலைவர் உட்பட முக்கிய தலைவர்களிற்கு கூட்டாக கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
இலங்கையின் பல்கலைக்கழக முறையின் பொறுப்புவாய்ந்த கரிசனைக்குரிய கல்விமான்கள் என தங்களை குறிப்பிட்டுள்ள அவர்கள் குறிப்பிட்ட தீர்மானத்திற்கும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச பொறிமுறைக்கும் தாங்கள் கடும்விருப்பமின்மையை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட தீர்மானம் தமதுசொந்த நலன்களை அடிப்படையாககொண்டு செயற்படும் நாடுகளின் அழுத்தங்களிற்கு உலக அமைப்புகள் அடிபணியும் நிலையை உருவாக்கியுள்ளது.
இலங்கையின் சட்டபூர்வமான தேசிய ஆயுத படையினர் குற்றவாளிகளா இல்லையா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு பொதுநலவாய நீதிபதிகள் அடங்கிய பொறிமுறையிடம் வழங்கப்பட்டுள்ளது- இதன் காரணமாக இந்த விசாரணை செயற்பாடுகளில் வெளிநாட்டு நீதித்துறையினர் ஈடுபடுத்தப்படுவர்- அரசமைப்பின் தற்போதைய பிரிவுகளின் அடிப்படையில் நோக்கும்போது இது அரசமைப்பிற்கு முரணானது.
மேலும் பயங்கரவாதத்தை தோற்கடித்த படையினருக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும்
குறிப்பிட்ட தீர்மானம் இலங்கையில் ஏற்கனவே காணப்படுகின்ற நல்லிணக்கம், சமாதானசமவாழ்வு,இன ஐக்கியம் என்பவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இதன் காரணமாக குறிப்பிட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை கைவிடுமாறு அரசாங்கத்தை கோருகின்றோம் என அவர்கள் குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

நிட்சயமாக இந்த கல்விமான்கள் பேரினவாத, சிறுபான்மை மக்களின் மீது துவேசம் கொண்டவர்களாகவே இருப்பார்கள் ஏனெனில் இந்த நாட்டில் பல சகாப்தங்களாக நசுக்கப்பட்டு பல உரிமைகள் மறுக்கப்பட்டு பல அப்பாவி மக்களின் உயிர்கள் அரச பயங்கர வாதத்தால் பறிக்கப்பட்டு மிருகங்களிலும் பார்க்க மோசமாக நடத்தப்பட்டு அகதிமுகாம்களில் அல்லல்படுகின்ற மக்களுக்காக எந்த ஒரு குரலும் கொடுக்காத, ஒரு சிறு அறிக்கையும் விடாத இந்த கல்வி மான்கள் இப்போது மட்டும் அரசியலமைப்புக்கு முரணானது என கூறுவதன் பின்னணி எதுவென்பது இனவாத சிந்தனையே தவிர வேறொன்றும் இல்லை. சிறுபான்மை மக்களின் உரிமைகள் உருதிப்படுத்துவதட்கான ஒரு கடிவாலமாகவே இந்த ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் அமைந்துள்ளது.
ReplyDelete