Header Ads



"தம்புளை மக்களிடம் இருந்து, தென்னகோன் பெயரை நீக்கமுடியாது"

தனது தந்தையான மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன் கைது செய்யப்பட்டமை குறித்து தான் மற்றும் தனது குடும்பம் ஆச்சரியமடைந்ததாக மத்திய மாகாண சபை அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

1999ஆம் ஆண்டு, நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் தனது தந்தையை கைது செய்துள்ளதாகவும், 1999ஆம் ஆண்டில் இருந்து பரிட்சித்து வருகின்ற வழக்கிற்கு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து தங்கள் ஊர் மக்கள் குழப்பமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1980 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் டீ.பீ.தென்னகோன் மரணித்த பின்னர் தென்னகோன் குடும்பத்தை மண்ணில் புதைக்க பலர் முயற்சித்தனர்.

எனினும் அரசியல் பழிவாங்களுக்கு முகம் கொடுப்பதற்கு தென்னகோன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஆயத்தமாக இருக்கின்றனர்.

தென்னகோன் பெயரை அரசியல் உலகத்திலும் தம்புளை மக்களிடம் இருந்தும்  நீக்கி விட முடியாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.