Header Ads



உடல் உறுப்புக்களை வழங்கலாம்

வாகன விபத்துக்கள் காரணமாக உயிரிழக்கும் நபர்களின் சிறுநீரகங்கள் உட்பட உடல் உறுப்புக்களை தமது விருப்பத்தின் பேரில் சுகாதார அமைச்சுக்கு வழங்கும் பந்தி ஒன்றை சாரதி அனுமதிப்பத்திரத்தில் சேர்ப்பது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இறப்பவரின் உடல் உறுப்புக்களை வேறு நபர்களுக்கு பொருத்தும் நடவடிக்கைகளும் வெற்றிகரமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையிலும் இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த கூடிய முறைகள் குறித்து ஆராய்ந்து, துரிதமாக அறிக்கை தருமாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன அதிகாரிகளுக்கு அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து அமைச்சின் அதிகாரிகள் விரிவாக கலந்துரையாடியுள்ளதுடன் உடல் உறுப்பு மாற்று சிகிச்சையை வெற்றிகரமான மேற்கொள்ள இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாக சுகதாரஅமைச்சு குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. நல்லதோர் திட்டம் ஆனால்,அவ்வாறு பெறப்படும் உடல் உறுப்புகள் ஏழைகளுக்கு தேவைப்படும்போது உபயோகப்படுத்தினால் நல்லது.அவ்வாறில்லாமல் v i p ,v v i p போன்றோக்கு மட்டும் பாவித்தால் கொடுப்பதில் எந்த நன்மையையும் இல்லை

    ReplyDelete

Powered by Blogger.