Header Ads



மகிந்த ராஜபக்ஸவை, முருங்கை மரத்தில் ஏற்றுவதற்கு முயற்சி..!

-நஜீப் பின் கபூர்-

பாராளுமன்றத்தில் உள்ள சுதந்திரக் கட்சியைச் சேராத ஒரு சிறிய குழுவினர் மைத்திரி-ரணில் தேசிய அரசுக்கு எதிராக சதி வேலைகளில் பகிரங்கமாக இறங்கி இருப்பதும் அதற்கு கடும் மஹிந்த விசுவாசிகள் ஒத்துழைப்பு வழங்கி வருவதையும் இந்த நாட்களில் அவதானிக்க முடிகின்றது.

இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றார்கள் என்று பார்த்தால் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை இவர்கள் பதவிக்கு அமர்த்தும் முயற்சியில் தோற்றுப் போய் அவரை பிரதமராகவாவது கொண்டு வந்து நிறுத்தி, அதன் மூலம் தமது அரசியல் வியாபாரத்தை நடத்தலாம் என்றிருந்தவர்கள். அதிலும் பட்டுப்போய் இப்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்தவை மீண்டும் முறுங்கை மரத்தில் ஏற்றி அவர் தலைமையில் தனிக் குழுவாக களத்தில் இறங்கி மைத்திரிக்கு ஒரு பாடம் புகட்டலாம் என்று எதிர்பார்க்கின்றார்கள். என்று தெரிக்கின்றது. 

இதற்கு முன்னாள் பெரியவர் ஒப்புதல் இருந்தாலும் பகிரங்கமாக களத்துக்கு வருவதற்கு மனிதன் அஞ்சுகின்றார். என்றாலும் விமல், உதய, போன்றவர்கள் மனிதனை எப்படியும் மீண்டும் ஒரு முறை முறுங்கை மரத்தில் ஏற்றுவது என்ற விடயத்தில் பிடியாக இருக்கின்றார்கள் என்பது எமக்குக் கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கை அரசின் நிதியை தவறாக பயன்படுத்தியது தொடர்பில், விஷேட நிதி மோசடி பிரிவு. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் வீரதுங்ஹ மற்றும், தொலைத் தொடர்பாடல் மானியக் குழுவின் முன்னாள் தலைவர் அனுஷா பெல்பிட்ட ஆகியோரை வழக்குத் தாக்கல் செய்வதற்கு முன்னர், அவர்களைக் கைது செய்து மாஜிஸ்ட்ரேட் முன்னால் ஆஜர்படுத்தத் தவறியது ஏன் என்பது குறித்து தனக்கு விளக்கம் தரவேண்டும் என்று மோசடிக் குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரிக்கு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.

எனவே மைத்திரி ஜனாதிபதி..! ஆனால் நிருவாகம் பண்ணுகின்ற அதிகாரிகள் மஹிந்தவின் ஆட்கள் என்ற ராஜிதவின் கூற்று இந்த விவகாரத்திலும் உண்மையாகி இருக்கின்றது. 

No comments

Powered by Blogger.