Header Ads



ரணில் நாடு திரும்பினார், குவியப்போகும் ஜப்பானின் உதவிகள்..!

ஐந்து நாட்கள் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்டு பிரதமர் மற்றும் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கை வந்தடைந்தனர்.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.349 ரக விமானத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பிரதமர் இலங்கை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் இணைந்து நேற்று மாலை கூட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

2016ஆம் ஆண்டின் முதல் பாதியில் இருந்து பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் இரு தரப்பு கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு இலங்கை மற்றும் ஜப்பான் இணக்கம் வெளியிட்டதாக கூட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது கட்ட கட்டுமாண நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

நகர்ப்புற போக்குவரத்தினை எளிதாக மேம்படுத்துவதற்கு மோனோ ரயில் முறையினை பயன்படுத்துவதற்காக இலங்கை மேல் மாகாணம் மெகா பொலிஸ் முறையின் கீழ் அபிவிருத்தி செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி, நெடுஞ்சாலை அபிவிருத்தி மற்றும் அதிவேக பாதை அபிவிருத்திக்காக தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவதற்கு ஜப்பான விருப்பம் தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தித் துறைக்காக இலங்கைக்கு மேலும் நிதி உதவி வழங்கவுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசாங்க அதிகாரிகள் 1800 பேருக்கு எதிர்வரும் வருடத்தில் விசேட பயிற்சி வழங்குவதற்கு ஜப்பான் பிரதமர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

3 comments:

  1. Why to beg other countries for Money ???? we have all the resources with us... better utilize them in a proper way, we can satisfy with what we have got !

    ReplyDelete
  2. Yes. we have 11 containers under the sea.

    ReplyDelete

Powered by Blogger.