"பௌத்த மதத்தை, பாதுகாக்க பணம் தேவை"
பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென தேசிய பிக்குகள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
பௌத்த சானத்தை பாதுகாத்து, பௌத்த மதத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
கடந்த காலங்களில் இந்த கடமைகளை உரிய முறையில் அரசாங்கங்கள் செய்யாத காரணத்தினால் 4000 விகாரைகள் மூடப்பட்டுள்ளன.
எனவே பௌத்த விகாரைகளையும் மதத்தையும் பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
பௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டுமென அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் எவ்வித வருமானமும் கிடைக்காத விகாரைகளை பராமரித்தல், சிறிய பெரிய பி;க்குகளை பராமரித்தல் போன்றன குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை.
விகாரைகளை பராமரிக்கவும் நடாத்திச் செல்லவும் அரசாங்கத்தின் அனுசரணை கிடைக்காத காரணத்தினால் பல விகாரைகள் மூடப்படுகின்றன.
நோய் வாய்படும் பௌத்த பிக்குகளுக்கு சிகிச்சை அளித்தல், கல்வி பயிலும் பிக்குகளுக்கு உதவி வழங்குதல் போன்றனவற்றுக்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட ணே;டுமென தேசிய பிக்குகள் முன்னணி கோரியுள்ளது.
இது குறித்து பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத இஸ்தனங்கள் மனிதர்களின் மன நிம்மதியாக இருக்க பெரிதும் உதவும் புனிதமான இடம்.இவை மக்கள் மிக எளிதில் போய்வரும் இடமாக இருக்க வேண்டும். இதை விடுத்தது நீங்கள் மலை உச்சியிலும், கற்பாறைகள் மேலும் அமைப்பதால் அதை தரிசனம் செய்வது கடினம் எனபதால்தான் மக்கள் விகாரைகளுக்கு மூடுவிழ கொடுக்கிறார்கள்.
ReplyDeleteBank LA pota sari
ReplyDelete