Header Ads



UNO வில் தனது நாட்டு மக்களையே விமர்சித்த, நைஜீரிய ஜனாதிபதி


நைஜீரியர்கள் தங்கள் கரடுமுரடான அணுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அதிபர் முஹம்மது புஹாரி கூறியுள்ளார்.

நைஜீரிய அதிபர் முஹம்மது புஹாரி மக்கள் ஒழுங்காக இருக்கும்படி வலியுறுத்திவருபவர்.

நைஜீரியா சுதந்திரமடைந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து தொலைக்காட்சியில் பேசிய அவர், சிறப்பான ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஒழுங்கீனத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் நாட்டில் பல நடைமுறைகளை புஹாரி வலியுறுத்தினார். பேருந்து நிறுத்தங்களில் மக்கள் வரிசையாக நிற்க வேண்டும் என அவர் கூறினார்.

அலுவலகத்திற்கு தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் திறந்த வெளியில் தவளைகளைப் போல குதிக்கும்படி தண்டனை விதிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.