அடி பாவி...!
தாத்ரி படுகொலை சம்பவம், உத்திர பிரதேசம் அரசின் நிர்வாக திறமையின்மையாலே நிகழ்ந்துள்ளதாக, மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரி நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, இதனை அவர் தெரிவித்தார்.
தாத்ரி படுகொலை சம்பவம் குறித்து பிரதமர் மவுனமாக உள்ளார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நஜ்மா ஹெப்துல்லா, நாட்டில் நிகழும் எல்லா சம்பவங்கள் குறித்தும் பிரதமர் பேச வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது என்று கூறினார்.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களது வளர்ச்சியிலும், மோடி தலைமையிலான அரசு தெளிவாக இருப்பதாகவும், தெரிவித்தார். பிரதமர் என்ன பேச வேண்டும்? என்று நாம் தீர்மானிக்க கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் பொறுப்பு என்று கூறிய அவர், இதுபோன்ற கண்டிக்கத்தக்க சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்காதது ஏன்? என்று உத்திரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த சம்பவம் சமாஜ்வாடி அரசின் நிர்வாக திறமையின்மையையே காட்டுவதாக தெரிவித்தார்.
பிற்குறிப்பு மாட்டிறைச்சி சாப்பிட்டதாக பரவிய வதந்தியினால் முஸ்லிம் சகோதரர் அடித்துக் கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்டவர்கள் இதுகுறித்து தமது கண்டங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment