Header Ads



அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அம்பாறை மாவட்ட தெரிவுகள்

(சுலைமான் றாபி)

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின்அம்பாறை மாவட்ட சம்மேளனத் தலைவராக  கல்முனை டொப் ஹீறோஸ்  விளையாட்டுக் கழகத்தின் தலைவரும். அகில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளருமான கே.எல். சுபைர் நேற்றைய தினம் (11) கல்முனை ஆசாத் மண்டபத்தில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் 36வது ஆண்டு நிறைவு விழாவும், சமூகசேவையாளர் கௌரவிப்பு நிகழ்விலேயே இவர் மாவட்ட சம்மேளனத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் இவர் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபடுவதோடு அண்மையில் இவரிற்கு அகில இலங்கை சமூக நல்லுறவு ஒன்றியத்தினால் "தேச சக்தி" எனும் பட்டம் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கதாகும். 

No comments

Powered by Blogger.