Header Ads



கல்முனையில் 35 இலட்சம் ரூபா பணம், நகைகள் கொள்ளை - திருமண வீட்டுக்கு சென்றவேளை அதிர்ச்சி

கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி - சாஹிபு வீதியிலுள்ள வீடு ஒன்றில் 35 இலட்சம் ரூபா பணமும் 02 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன. 

இச் சம்பவம் நேற்று மதியம் 01.30க்கும் இரவு 8.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றிருக்கலாம் என, வீட்டு உரிமையாளர் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

சம்பவத்தன்று வாகனம் ஒன்றை விற்பனை செய்த இந்நபர் அதன் மூலம் கிடைத்த 35 இலட்சம் ரூபா பணத்தையும் குறித்த நகைகளையும் வீட்டில் வைத்து விட்டு, மருதமுனையில் இடம்பெற்ற திருமணம் ஒன்றுக்கு சென்று விட்டு இரவு திரும்பியுள்ளார். 

இதன்போது தமது வீடு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

இது, தொடர்பில் கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.