Header Ads



பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களில் இந்தியாவிற்கு தொடர்பு - ஐ.நா.வில் பரபரப்பு குற்றச்சாட்டு

ஐ.நா. பொதுச்சபையின் 70–வது அமர்வு கடந்த 15–ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் கடந்த புதன்கிழமை பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷெரீப், தீவிரவாதத்தால் பாகிஸ்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்தியா பாகிஸ்தான் இடையிலான எல்லை பிரச்சனை மற்றும் காஷ்மீர் பிரச்சனைகளுக்கு தீர்வாக 4 அம்ச திட்டத்தினையும் அவர் முன் வைத்தார். 

இதனை தொடர்ந்து, ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் நேற்று பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நவாப் ஷெரீப் முன் வைத்த 4 அம்ச திட்டத்தை நிராகரித்து பேசினார். மேலும், பயங்கரவாதத்தைக் கைவிட்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று சுஷ்மா திட்டவட்டமாக தெரிவித்தார். 

இந்த நிலையில் நேற்று இரவு இந்தியாவின் உரைக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் தரப்பில் பிரதிநிதி ஒருவர் பேசினார். முன்னதாக பயங்கரவாத்தை ஊக்குவிப்பதில் இந்தியாவின் பங்கு இருப்பதற்காக ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்கள், ஐ.நா பொதுச்செயலாளர் பான்-கி-மூனிடம் பாகிஸ்தான் தரப்பில் சமர்பிக்கப்பட்டது. 

அந்த ஆவணத்தில், இந்திய அரசின் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் தெக்ரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாகவும், அதன் மூலம் பாகிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

மேலும் "பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மற்றும் கராச்சி பகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் பயங்கரவாத சம்பவங்களில் இந்தியாவின் தலையீடு அதிக அளவில் உள்ளது" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, "பயங்கரவாதம் குறித்து மிகுந்த கவலை கொள்வதாக இந்தியா கூறி வருகிறது. ஆனால் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்வதிலும், இருநாடுகளிடையே நிலவும் ஒட்டு மொத்த சூழலுக்கும், அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை" என்றார்.  மேலும் இருதரப்பிடையே சுமூகமான பேச்சுவார்த்தை நடத்த இ

No comments

Powered by Blogger.