Header Ads



ஜனக பண்டாரவை பார்வையிட்ட, மகிந்த சகோதரர்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பொருளாதார அமைச்சர் பெசில் ராஜபக்ஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனை சந்தித்துள்ளனர்.

1999ம் ஆண்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் ஜனக பண்டார தென்னக்கோன் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட ஜனக பண்டார தென்னக்கோன் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனகவை மஹிந்த, நாமல் மற்றும் பெசில் ஆகியோர் பார்வையிடச் சென்றுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்களான குமார வெல்கம, பந்துல குணவர்தன உள்ளிட்ட மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனக பண்டார தென்னக்கோனை சந்தித்துள்ளனர்.

ஜனக பண்டார தென்னக்கோனை எதிர்வரும் 20ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.