சீனாவுடன் ரவூப் ஹக்கீம் பேச்சு
புளோரைட் அதிகமுள்ள தண்ணீரின் கனதியை குறைப்பதனூடாகவும் தண்ணீரில் செறிந்துள்ள கல்சியத்தின் அளவை குறைப்பதனூடாகவும் சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு ஏற்றவகையில் தூய நீரை வழங்குவது சாத்தியமாகும். தண்ணீரில் கலந்துள்ள கனிப்பொருள்களின் செறிவு சிறுநீரகத்தோடும், கல்லீரலோடும் தொடர்பான நோய்களுக்கு வழிகோலுகின்றன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சீனப் பேராசிரியரும் அமைச்சருமான யானா தலைமையில் சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் சுத்திகரிப்பு உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசியர்களும், நிபுணர்களும் அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது அமைச்சின் கேட்போர் கூடத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அங்கு இதனைக் கூறினார். அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றியபோது கூறியதாவது,
நாட்டில் தெரிவு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் நிலமட்ட நீர் அசுத்தமடைவது தொடர்பாக சீன நிபுணர்கள் கொண்ட ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கும் மற்றும் சீனாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட விஜயத்தின் போது சீனா அரசாங்கம் வழங்கிய மகத்தான வரவேற்புக்கும்;, அமைச்சர் ஹக்கீம் நன்றிகளைத் தெரிவித்தார்.
நீரில் கலந்துள்ள இரசாயன பாதார்த்தங்களை வேறாக்கி, நீரை சுத்தீகரிப்பதற்கு உதவும் ஆர்.ஓ என சுருக்கமாக குறிப்பிடப்படும் இயந்திரத்தையும், அதன் பொறிமுறையையும் பதவிய நகருக்கு அருகிலுள்ள பராக்கிரமபுர என்ற கிராமத்தில் 700 குடும்பங்களுக்கு நாள் தோறும் தலா 40 லீற்றர் சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் இதன் போது சீன பேராசிரியரிடம் தெரிவித்தார்.
சிறுநீரக நோய் அதிகம் காணப்படும் ஏனைய சில மாகாணங்களுக்கும் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தாம் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாகவும் இதன்போது அமைச்சர் கூறினார்.
புளோரைட் அதிகமுள்ள தண்ணீரின் கனதியை குறைப்பதனூடாகவும் தண்ணீரில் செறிந்துள்ள கல்சியத்தின் அளவை குறைப்பதனூடாகவும் சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு ஏற்றவகையில் தூய நீரை வழங்குவது சாத்தியமாகும். தண்ணீரில் கலந்துள்ள கனிப்பொருள்களின் செறிவு சிறுநீரகத்தோடும், கல்லீரலோடும் தொடர்பான நோய்களுக்கு வழிகோலுகின்றன.
குழாய் நீர் கிணறுகளின் உபயோகம், மழை நீரை தேக்கிவைத்து வறட்சி நிலவும் காலங்களில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் என்பனபற்றியும் கூடுதல் கவனம் செலுத்தப்படுமென அமைச்சர் ஹக்கீம் இக்குழுவினரிடம் நம்பிக்கை தெரிவித்தார். வடமேல் மாகாணத்திலுள்ள கல்பிட்டி வாவியிலிருந்து சுத்தமான நீரைப் பெறுவதற்கான ஆய்வொன்றை மேற்கொள்ளும் படியும் அமைச்சர் ஹக்கீம் சீனத் தூதுக் குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.
ஜெம்சாத் இக்பால்
நல்ல திட்டம்தான் ஆனால் சீனர்களின் கலப்படம் எங்கு ஊடுருவவில்லை?
ReplyDelete