யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு, சேவையாற்ற உறுதி பூண்டுள்ளேன் - ஹிஸ்புல்லாஹ்
(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம்களும், மீள்குடியேற்ற காத்திருக்கும் முஸ்லிம்களும் பிரத்தியேகமான சிக்கல்களை எதிர்நோக்குவதாக தெரிவித்த மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா மிகவிரைவில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்செய்து அங்குள்ள முஸ்லிம்களுடன் கலந்துரையாடவிருப்பதாக தெரிவித்தார்.
ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு பிரத்தியேகமாக வழங்கிய நேர்காணலொன்றில் கருத்து வெளியிட்ட ஹிஸ்புல்லா இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது,
மீள்குடியேற்ற அமைச்சர் என்ற அமானிதத்தை அல்லாஹ் என்னிடம் ஒப்படைத்துள்ளான். தற்போதுதான் (இந்த வாரம்) என்னுடைய அமைச்சுப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளேன். சில வாரங்களாக இருந்த அலுவலக சிக்கல், அதிகாரிகள் உள்ளிட்ட தாமதங்கள் நீக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண முஸ்லிம்கள் புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகி 25 வருடங்களாகிறது. யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு பல தடைகள் உள்ளன. குறிப்பாக அரச அதிகாரிகளின் தரப்பிலிருந்து வெளியாகும் சில தடைகள் உள்ளன. இந்த தடைகள் தகர்க்கபட்ட வேண்டியவை. அல்லாஹ்வின் உதவியுடனும், யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஒருமித்த ஒத்துழைப்புடனும் இந்த தடைகளை தகர்ப்பேன்.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு உள்ள தடைகளை நான் அறிவேன். இதற்கு அரசாங்கத்தின் உயர்மட்ட ஒத்துழைப்புடன் தீர்வுகாண முயற்சிப்பேன். கடந்த காலங்களில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மறக்கப்பட்டிருந்தனர். அந்த நிலையை விரைவில் மாற்றியமைப்பேன். மீள்குடியேறிய யாழ்ப்பாண முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பேன். மீள்குடியேற காத்திருக்கும் முஸ்லிம்களுக்கு உரிய வசதிகளை செய்யவும், அவசியப்படுமிடத்து சர்வதேச சமூகத்தின் ஆதரவு, முஸ்லிம் உலகின் ஒத்துழைப்புகளை பெறவும் நடவடிக்கை மேற்கொள்வேன்.
யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களுக்கு மிகவிரைவில் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளேன். அங்கு நேரடியாக நிலைமைகளை என்னால் அவதானிக்கமுடியும். யாழ்ப்பாண முஸ்லிம்களின் வாழ்வில் புது மறுமலர்ச்சியை ஏற்படுத்த முயற்சிப்பேன். இதில் நான் உறுதியாகவுள்ளேள். இறைவனின் உதவியுடன் இதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையும், என்னிடமுள்ளது எனவும் அமைச்சர் ஹிஸ்புல்லஹ் இதன்போது ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு உறுதிபட தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்துக்கும் இந்த நாட்டுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால முன்னேற்றத்துக்குமான மிகச் சரியான சிந்தனையும் முடிவுமாகும், ஆனால் இந்த பொறுப்பு பிழையான ஒரு நபரிடம் ஒப்படைக்க உள்ளது மிகவும் பிழையான முடிவாகும் என்பது எமது கணிப்பாகும்.
ReplyDeleteஹிஸ்புல்லா அவர்களின் கடந்த கால அரசியல் முன்னெடுப்புக்களும் அவரது சுயநலமான, நம்பகத்தன்மையற்ற முஸ்லிம் சமூகத்துக்கு மிகவும் ஆபத்தான முடிவுகளை எடுத்தமை பற்றி குறிப்பிடுவது இச் சந்தர்பத்தில் மிகவும் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறோம்.
1. கனவான் ஒப்பந்தம் மீறப்பட்டமை. ( தலைவர் அஷ்ரப் அவர்களால் செய்யப்பட்ட ஏற்பாடு ஏறாவுருக்கு கொடுக்கப்படவேண்டிய எம்பி பதவி )
2. சாராயத் தவறணை ஒன்றுக்கான அனுமதி கொடுத்தல் சம்பந்தமாக உதவி புரிந்தமையால் தலைவர் அஷ்ரப் அவர்களால் கட்சியில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டமை.
3. தம்புள்ளை பள்ளிவாசல் சம்பந்தமான உண்மைக்கு புறம்பான அறிக்கை.
5. கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரித்து முஸ்லிம் சமூகத்துக்கே அச்சுறுத்தலாக இருந்தமை.
எதிர்காலத்தில் இவரது அரசியல் முன்னெடுப்புக்கள் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.