Header Ads



இலங்கையில் புதிய இன அந்தூரியம் + ஓகிட் வகைகள் அறிமுகம்

பேராதனை தேசிய பூங்கா திணைக்களத்தின் மலர் உற்பத்தி ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் ஆய்வு செய்து உருவாக்கப்பட்ட புதிய இன அந்தூரியம் மற்றும் ஓகிட் வகைகள் தற்போது மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 1970ஆம் ஆண்டு தொடக்கம் பல ஆண்டுகளாக செய்யப்பட்ட தரமான ஆய்வுகளின் விளைவாக இப்புதிய இன மலர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வாய்வுகளின் அடிப்படையில் கபுமல் அந்தூரியம் 31, லேடி  ​ஜேன் வகை அந்தூரியம் 31, டென்ட்ரோரியம் வகை ஓகிட் 4, பெலனொப்ஸிஸ் வகை ஓகிட் 1, கெடலியா வகை ஓகிட் 1 புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

இப்புதிய வகை மலர்களை அறிமுகம் செய்யும் விழா திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது பல மலர் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.

தற்போது வௌிநாட்டு சந்தைகளில் மிகுந்த வரவேற்பை பெற்ற அந்தூரியம் மற்றும் ஓகிட் வகைகளுக்கு பதிலாக இப்புதிய இனத்தை அறிமுகப்படுத்தினால் சிறந்த சந்தைவாய்ப்பை பெறமுடியும் என திணைக்களம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.




No comments

Powered by Blogger.