Header Ads



அங்குலி மாலாவிற்கு மரண தண்டனை விதித்திருந்தால், அவர் துறவியாகியிருக்க மாட்டார் - அதுரலிய ரதன தேரர்

மரண தண்டனை விதிப்பதனால் குற்றச் செயல்களை தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு மரண தண்டனை ஓர் தீர்வாக அமையப் போவதில்லை. இன்றைய உணவுப் பழக்க வழக்கங்கள் மனிதரின் மரபணுக்களில் வியாகூல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பொலிஸ், நீதிமன்றம் ஆகியன தொடர்பில் பிரச்சினை உண்டு. இது குறித்து ஆராய வேண்டியது அவசியமாகின்றது.

சேயா சிறுமி உள்ளிட்ட சம்பவங்கள் நாட்டில் இடம்பெறுகின்றன. ஊடகங்களின் ஊடாக இந்த சம்பவங்கள் செய்தி அறிக்கையிடப்படும் போது சமூக விஞ்ஞான நோக்குடன் அறிக்கையிடப்பட வேண்டும்.

நாட்டின் சமூகக் கலாச்சாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. சுயநலவாதம் ஆதிக்கம் செலுத்துகின்றது. சகவாழ்வு என்ற விடயம் கிடையாது.

அங்குலி மாலாவிற்கு மரண தண்டனை விதித்திருந்தால் அவர் துறவியாகியிருக்க மாட்டார் என ரதன தேரர் நாடாளுமன்றில் நேற்று குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Thuravi ahinal ellakoothum podalam

    ReplyDelete
  2. ரெம்பதான் பயந்து போயிடாங்க போலதோனுது என்ன செய்வது முடிவு எடுப்பதும் மூடிமரைப்பதும் அவங்க அமைப்பாச்சே..............

    ReplyDelete

Powered by Blogger.