Header Ads



திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான, புதிய வட்டார எல்லை நிரணயம் சம்மந்தமான கலந்துரையாடல்

-ஏ.எல்.ஆர்தீன்பாபு-                                                          

திருகோணமலை தேர்தல் தொகுதிக்குள் தாபிக்கப்படவுள்ள புதிய வட்டார எல்லை சம்மந்தமான கலந்துரையாடல் நேற்று முன்தினம் முன்னால் பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்தௌபீக் தலைமையில் நிலாவெளி ஆர்.டி.எஸ்.கட்டிடத்தில் நடைபெற்றது.இதன் போது குச்சவெளி,திருகோணமலை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய கிளை உறுப்பினர்கள்,முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள் அரசியல் உச்சபீட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முறையற்ற விதத்தில் தாபிக்கப்பட்ட  குச்சவெளி கிராமசேவையாளர் பிரிவுகளின் எல்லைகள் பெயர்கள் மாற்றப்ட வேண்டுமென்ற கோரிக்கை குச்சவெளியைச் சேர்ந்த முன்னால் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஆசிக், கிழக்குமாகாண சபை வேற்பாளராகப் போட்டியிட்ட பளிள் அமிர்,அமிர்ஜான்,;.தியாக்கான் ஆகியோரினால் முன்வைக்கப்பட்டன.

இங்கு இவர்களினால் கூறப்பட்ட கருத்துக்கள் வருமாறு.  திருகோணமலை நகரத்தின் வடக்கே 32 கிலோ மீட்டர் தொலைவில் தமிழ் முஸ்லிம்களின் சுமார் 400 வருடங்கள் வரலாற்றைக் கொண்ட கிராமமே குச்சவெளியாகும். தமிழ்,முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்ந்த கால கட்டத்தில் இரு இனத்தவருக்குமான குடியிருப்புப் பிரதேசம் வௌ;வேறாகவே கிராம நிருவாக அலகு பிரிக்கப்பட்டிருந்தது.தமிழ் மக்களுக்கு கி.சே. பிரவு 238. முஸ்லிம் மக்களுக்கு கி.சே.பிரிவு 239 என்றும் .வட்டார அலகு நான்கு வட்டாரங்களாகும். 1ஆம்,2ஆம் வட்டாரம் தமிழ் மக்களுக்கும் 3ஆம்,4ஆம் வட்டாரம் முஸ்லிம் மக்களுக்குமாக வழங்கப்பட்டிருந்தது.இரு சமூகங்களுக்கிடையே பிணக்குகள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கில் பொதுவான ஒரு எல்லை ஒன்றும் வகுக்கப்படடிருந்தது. வயல் நிலங்கள்,குளங்கள்,மேய்ச்சல் நிலங்கள்,கடல் வழங்கள் இவற்றைக் கருத்திற் கொண்டே நிர்மாணிக்கப்படடிருந்தது.பழங்காலத்து உறுதிக்காணிகளை அதிகமாகக் கொண்ட பாரம்பரிய பிரதேசங்கள் இக்கிராமத்தில் உள்வாங்கப்பட்டிருந்தது.குச்சவெளி வடக்கு குச்சவெளி கிழக்கு என இரு கிராம அபிவிருத்திச் சங்கங்கள் இயங்கி வந்தன.

இக்கால கட்டத்தில் 1985 ஆம் ஆண்டு வன் செயல் ஏற்பட்ட வேளையில் இடம்பெயர்வும் நிருவாக சீர்கேடுகளும் ஏற்பட்டன. வடகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் ஆடசி நிருவாகத்தின் கீழ் 1989 ஆம் ஆண்டு 250 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகர் என்ற திட்டம் அமுலுக்கு வந்த போது  குச்சவெளி பிரதேச செயலக அதிகாரிகள் தன்னிச்சையாக சமுகத் தலைவர்களின் கருத்துக்களைக் கோராது கிராமத்தின் எல்லையையும்,பெயரையும் மாற்றியதுடன் சமூகங்களிடையே குரோத மனப்பாங்கையும் ஏற்படுத்தினர்.இதன் மூலம் தமிழ் மூன்று கிராம சேவகர் பிரிவும்,இரண்டு முஸ்;லிம் கிராம சேவகர் பிரிவும் உருவாகுவதற்கு வழிவகுத்தது. பாரம்பரியமாக வாழ்ந்த முஸ்லிம் கிராமம் புதிய குடியேற்றக் கிரரமமாகக் கருதும் அளவுக்கு காசிம் நகர் கிராமசேவகர் பிரிவாக  பிரிக்கப்பட்டுள்ளது. அப்போதைய காலகட்டத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களின் அழுத்தமும் பின்புலமும் இருந்தது இதற்கான காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. முஸ்லிம்களுக்கு இளைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதியாகும் முற்றிலும்  இது ஒரு அடிப்படை உரிமை மீறளாகும் என்றும் இங்கு கூறப்பட்டது.

புடவைக்கட்டைச் சேர்ந்த ஏ.சி.எம்.மீஸான் தெரிவிக்கையில் பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழ்ந்த பாரம்பரிய கிராமம் புடவைக்கட்டு இக்கரமத்திற்கென ஒரு வரலாற்றுப் பின்னனியே இருக்கிறது.இக்கிராமம்  செந்தூராக மாற்றப்பட்டது.

நிலாவெளியைச் சேர்ந்த அல்ஹாஜ் சகாப்தீன்,முன்னால் பிரதேச சபை உறுப்பினர் சபிக் ஆகியோர் தெரிவிக்கையில் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் என்னும் பெயர் நிலாவெளி முஸ்லிம் கிராமத்திற்கு சூட்டப்பட்டுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்டினர்.

இவ்விடயம் சம்மந்தமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள்,கட்சித்தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.