Header Ads



கொலை வழக்கில் பிள்ளையானை கைதுசெய்ய நடவடிக்கை..?

கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனை விசாரணைக்கு வருமாறு குற்றப்புலனாய்வு பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலாய்வு பிரிவில் இன்று மாலை 5 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நேற்று மாலை வாழைச்சேனையில் உள்ள சந்திரகாந்தனின் இல்லத்திற்கு சென்று அவரை கைதுசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அங்கு அவர் இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் சந்திரகாந்தன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே பிள்ளையானை கைது செய்யும் பணியை குற்றப் புலனாய்வுத்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

2 comments:

  1. உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்தேயாக வேண்டும்!

    ReplyDelete
  2. அப்ப சீனி திண்டவன் தேனீர் குடிப்பானோ? சிரித்து கொண்டு தவறு செய்யும் யாவரும். அழுது கொண்டு தண்டனை பெற நேரும்.

    ReplyDelete

Powered by Blogger.