Header Ads



ஒலுவில் மீன்பிடித்துறைமுகம் குறித்து, மகிந்த அமரவீரவின் வாக்குறுதிகள்


-மு.இ.உமர் அலி-

இன்று 2015-10-26  ஞாயிறு பிற்பகல்  மீன்பிடி கடற்றொழில்,நீரியல் வழங்களுக்கான  அமைச்சர்  மகிந்த அமரவீர பைசால் காசிமின் விசேட அழைப்பினை ஏற்று அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார். அமைச்சருடன் அமைச்சின் உயர் அதிகாரிகளும்,பிரதி அமைச்சர் அமீர் அலியும் வருகை தந்திருந்தனர்.

.ஒலுவில் மீன்பிடித்துறைமுகத்தின்  பிரச்சனைகளை  பைசால்காசீம் அமைச்சருக்கு  விளக்கிக் கூறினார், பயன்படுத்தபடாமல் இருக்கும் வளங்களையும்  கூட்டிச்சென்று காட்டினார். 

பிரதி அமைச்சரதும் மக்களதும் கருத்துக்களை  உன்னிப்பாக செவிமடுத்த அமைச்சர்  மிகவிரைவில் துறைமுக அதிகார சபையிடமிருந்து உத்தியோகபூர்வமாக  மீன்பிடித்துறைமுகம்   கையேற்கப்பட உள்ளதாகவும், இது பற்றி  ஏற்கனவே  துறைமுகங்கள்  அபிவிருத்தி அமைச்சருடன் பேசிவிட்டதாகவும் கூறினார்

மற்றும் சிறிய படகுகள்  தரித்து நிற்பதற்கான  துறை ஒன்றினை  அடுத்த வருடம் அமைத்துத் தர  நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.அத்துடன் மீனவர்களுக்கு தமது  துறையை அடையாளம் காணக்கூடிய  சமிக்சை  வழங்கும் இலத்திரனியல் கருவி ஒன்றினை  பொருத்த இருப்பதாகவும்  தெரிவித்தார்.

கடலரிப்பு சம்பந்தமாகவும் இதனால் மீனவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் பற்றி கரையோர  பாதுகாப்பு திணைக்களத்துடன்  பேச்சுவார்த்தை நடாத்துவதுடன்,கடந்த காலங்களைப்போல் அன்றி இனிவரும் காலங்களில் தரமான  மீன்பிடி வலைகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக்கவும் கூறினார்.

1 comment:

  1. He is a community worker. He ever listen peoples voices

    ReplyDelete

Powered by Blogger.