Header Ads



கல்முனை வலய மட்டத்தில், நிந்தவூர் மாணவிக்கு முதலாமிடம்.

  ( ஏ.எல்.ஏ.றபிக் பிர்தௌஸ் )

கல்முனை வலயத்திலுள்ள நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் தரம் 13ல் கல்வி பயிலும் செல்வி. சஹீது பாத்திமா சஜானா எனும் மாணவி 2015ம் ஆண்டின் அகில இலங்கை ரீதியிலான ஆங்கில தினப் போட்டியின் பிரதி பண்ணல் நிகழ்சியில் முதலாம் இடத்தைப் பெற்று, பெற்றோருக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் ஆசிரியர்களான திரு.சஹீது, திருமதி.பாத்திமா சஹீது ஆகியோரின் ஏகபுதல்வியாவார்.

இம்மாணவியிற்கும், அவரது பெற்றோர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும், வழிகாட்டிய கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கும் மதீனா வித்தியாலய அதிபர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.