உலக முஸ்லிம் விவகாரங்கள் குறித்து, அர்துகானின் சீறிப்பாயும் கருத்துக்கள்..!
-Mohamed Basir-
துருக்கிய ஜனாதிபதி அர்துகான் அல்-ஜெஸீராவுக்கு அளித்த நேர்காணலிலிருந்து,
-------- சிரியா --------
- சிரியாவில் ரஷ்யா மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கையை மீள்பரீசீலனை செய்யுமாறு ரஷ்ய ஜனாதிபதி விலாமிடிர் புட்டினிடம் கோருவேன்.
- சிரியாவில் ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல்கள் தாயிஸை குறிவைக்க வில்லை. அது நடுநிலைவாத எதிரணியையே குறிவைத்திருக்கிறது.
- ரஷ்யாவுக்கு சிரியாவுடன் எல்லைத் தொடர்புகள் இல்லாத நிலையில் அது சிரியா விடயத்தில் காட்டும் கரிசனை விநோதமானது.
- பஷ்ஷார் அல்-அஸதை இருப்பாட்டி சமாதானத்தை ஏற்படுத்துவது என்பது முடியாத காரியமாகும்.
-------- அகதிகள் --------
- முழு ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்து எட்டு இலட்சம் அகதிகளை தத்தெடுத்திருக்கிறது. ஆனால், துருக்கி இரண்டு மில்லியன் அகதிகளை தத்தெடுத்திருக்கிறது. அகதிகளுக்கு எமது கதவுகள் திறந்தே உள்ளன.
-------- அக்ஸா --------
- மஸ்ஜிதுல் அக்ஸா பலஸ்தீனர்களுக்குரியது மட்டுமல்ல. அது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் விவகாரம். இஸ்ரேல் நெருப்புடன் விளையாடுகிறது. அது மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு விலை செலுத்தியாக வேண்டும்.
-------- எகிப்து --------
- நான் பதவியில் இருக்கும் காலத்தில் எகிப்தின் ஜனாதிபதியாக முஹம்மத் முர்ஸியைத் தவிர வேறொருவரை ஏற்பது பற்றி சிந்திக்கப் போவதில்லை.

His excellency president, thanks for reminding entire Muslims that masjid Aksa is belongs to entire Muslims therefore raise up the voice against to who ever trying to grab the area.
ReplyDeleteஇவர்தான் ஆம்புல சிங்கம் தக்வாதாரி.அல்லாஹ் உங்களின் பலத்தை மென்மேலும் பலப்படுத்துவானாக ஆமீன்
ReplyDeleteHis excellency president - Praying Allah for strengthening your regime in Turkey
ReplyDelete