Header Ads



தூக்குத் தண்டனையை எதிர்க்கும் ராஜித சேனாரத்ன

மேலோட்டமாக தடவிப் பார்த்து பிரச்சினைகளை தீர்க்க முடியாது, தேசிய பிரச்சினையை இவ்வாறு மேலோட்டமாக தடவிப்பார்த்து தீர்க்க முயற்சித்து தவறிழைத்து கொண்டதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால், மன ரீதியான பிரச்சினைகளை கண்டறிந்து, அதற்கு தீர்வை வழங்குவது முக்கியமானது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியலும் அரசியல்வாதிகளும் தற்போது வங்குரோத்து நிலைக்கு சென்று, தூக்கு மரம் பற்றி பேசுகின்றனர். சில ஊடகங்களும் இவ்வாறு வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளன.

தமது வாக்கு வங்கி குறைந்து விடும் என்ற அச்சத்தில் தூக்குத் தண்டனையை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மையை பேசுவதில்லை. நான் அது பற்றி சிந்திக்காமல் உண்மை பேசுகிறேன்.

மரண தண்டனையை அமுல்படுத்துவதால், குற்றங்கள் குறைந்து விடும் என்பது பற்றி அறிய எவ்வித விசாரணைகளையும் கருத்து கணிப்புகளையும் நடத்தாது, அது பற்றி பேசுவது கேலிக்குரியது.

மரண தண்டனை அமுலில் இருந்த காலத்தில் கூட 4 லட்சம் கொள்ளை போன்ற பரப்பரப்பான குற்றங்கள் நடந்தன. குற்றத்திற்கு மரண தண்டனை வழங்குவதால், குற்றவாளி குற்றத்தில் இருந்து விடுதலையாகி விடுவார். தண்டனை அனுபவிப்பதற்காக குற்றவாளி வாழ வேண்டும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.