Header Ads



25,000 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட, கிராம சேவகர் கைது

வதிவிட சான்றிதழ் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றுக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விஷ்வமடு கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராம சேவகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விஷ்வமடு பிரதேசத்தில் வசிக்ககூடிய நபர் ஒருவரின் உறவினருக்கு அந்த வீட்டில் குடியிருந்து வருவதாக வதிவிட சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்கு குறித்த கிராம சேவகரால் 25,000 ரூபா இலஞ்சமாக கோரப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த கிராம சேவகர் இலஞ்சப் பணத்தை பெற்றுக் கொள்ள முற்பட்டவேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

1 comment:

  1. கிராம அதிகாரிகளான விதானை களின் லஞ்சத்தை ஒழித்தால் நாடு வல்லரசுக்கு சமன்.இவர்கள் (ஒருசிலரை தவிர ) எடுக்கும் இலஞ்சம் பரம ஏழைகளின் வியர்வை என்னும் நெருப்பைத்தான் உண்ணுகிறார்கள்.ஒரு பிறப்பு பதிவு எடுக்க முடியாது ஒரு வதிவிட சான்றிதல் எடுக்க முடியாது தேசிய அடையாள அட்டை எடுக்க முடியாது எந்த வேலைகளும் இவர்கள் இலஞ்சம் இல்லாமல் செய்வதில்லை இந்த உலகத்தில் ஒரு கேவலம் கெட்ட அரச அதிகாரிகள் என்றால் இந்த GS கல்தான் மனசாசியே இல்லாமல் கண்போஞ்சாதிகளிடம் (விதவைகள் )பறித்து எடுக்கும் காட்சியை காணமுடிகிறது .

    ReplyDelete

Powered by Blogger.