விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள "தமிழீழ வீதி வரைபடம்"
தேசிய சுதந்திர முன்னிணியின் தலைவர் விமல் வீரவன்ச “வன்னி, ஜெனீவா மற்றும் நியூயோர்க்: தமிழீழ வீதி வரைபடம்” என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
கொழும்பு ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு 21 மாலை நடைபெற்றது.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, பேராசிரியர் குணதாச அமரசேகர, தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் முஹாம்மில், நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, டலஸ் அழப்பெரும, உதய கம்மன்பில மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ வித்தாரண உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இலங்கை அரசாங்கம் மெக்ஸ்வெல் பரணகமவின் அறிக்கையை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரது அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக விமல் வீரவன்ச இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொள்ளையர்களின் கூட்டணி
ReplyDeleteபுதுவிதமான மனநோய்
ReplyDeleteProvide the lemon puff biscuits to make a campaign against UN again.
ReplyDelete